(Reading time: 11 - 21 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

     அவர்களைத் தொந்தரவு செய்யாமல் வெளியே வந்தவள். வெளியே பார்க்க அங்கு சில பெண்கள் தண்ணீர் தெளித்து கோலம் போடும் வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.

      ஆனால் எல்லோரும் தண்ணீருக்கு பதில் சாணத்தினையே பயன்படுத்தினர்.  தன் வீட்டை சுற்றி சுற்றி பார்த்தவள் எங்கும் சாணம் இல்லை. அருகில் ஒரு வயதான பெண்மணி கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று,

   பாட்டி சாணம் எங்க கிடைக்கும்.

  அந்த வயதான பெண்மணி கோலம் போடுவதை நிறுத்திவிட்டு, அவளைப் பார்த்து நீ தான் புதுசா வந்திருக்க மருமகளா கண்ணு,

     தர்ஷினி அவளுக்கே உரிய சிரிப்புடன் ஆமா பாட்டி என்று கூற,

    அழகா மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா....

    அவள் சிரிப்பையே பதிலாக கொடுத்தாள்.

      சரி பாட்டி எல்லாரும் சாணத்தில தான். வாசல் தெளிக்கிறாங்க. எங்க வீட்ல சாணம் இல்ல அது தான் கேட்டேன் என்று கூற,

     உங்க வூட்ல சாணம் மட்டும் இல்லமா வாசலே தெளிக்க மாட்டாங்க.

   ஏன் பாட்டி அவுங்களுக்கு பிடிக்காதா......

   அப்படி இல்ல கண்ணு....மருமகளுங்க வர வரயிலும் உங்க அத்த வாசல் எல்லாம் சாணம் போட்டு தெளிச்சி அழகா கோலம் போட்டுக்கிட்டு தான் இருந்தது. மருமகளுக்கு வந்த உடனே இத பார்த்துகிடுவாளுகனு விட்டிருச்சு. ஆனா எந்த மருமகள்களும் நான் வாசல் தெளிச்சி பார்த்ததே இல்லத்தா....

விசேஷ நாளுல மட்டும் உங்க அத்தை கோலம் போடும் மத்த நாளெல்லாம் கோலம் போட மாட்டாங்கத்தா....

    அவள் அதே சிரிப்புடன் சரி பாட்டி இன்னிக்கு மட்டும் நீங்க எனக்கு சாணம் கொடுங்க.... நாளையல இருந்து எங்க கிடைக்கும் சொன்னீங்கன்னா நான் வாங்கிட்டு வந்துருவேன் என்று கூற....

     அவளை நெட்டி முரித்தவர். நான் உனக்கு வாங்கிட்டு வந்து தரேன் கண்ணு. உனக்கு இது கூட செய்ய மாட்டேனா... என்று அந்த வயதான பெண்மணி வாஞ்சையாக கூற,

     அவருடைய அன்பில் நெகிழ்ந்தவள். அவரிடம் சாணமும், அரிசி மாவும் வாங்கி வாசல் தெளித்து அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.

      அவள் சென்றவுடன் தன் உடையை மாற்றிக் கொண்டவன். அவள் வருவாள் என்று

26 comments

  • Thank u so so much sir. Na avlo periya writer lam ela sir. Na oru kathukutty na elutha arambichu two years tha aguthu sir. Ungaludaya anupavam vaintha eluthuku munadi na elam onume ela sir. Neenga enoda story virumbi padipathu happy sir.
  • Good morning, dear Dhanu! எனக்கு முன்பே 421 பேர் படிச்சிட்டாங்களேன்னு கோபமாக, படித்தேன், ரொமாண்டிக் பகுதி என்னை சமாதானப்படுத்தியது. சினிமாவிலே வருகிறமாதிரி, யதார்த்தமாக இருந்தது! கதை குடும்பப்ஆங்காக மாறுகிறது! வெளுத்து வாங்குங்க!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.