என்னை இப்படியே விட்டுவிடு. ஏதோ என் மனம் தாங்கலை. இப்படி தனியாக இருந்து அந்த ஆதங்கத்தை தீர்த்துக் கொள்கிறேன்... “ என்று வேதனையோடு சொல்ல தன் அன்னையின் முகத்தில் இருந்த வேதனையை கண்டவன் மனம் உருகி விட்டது
கடந்த இரண்டு நாட்களாகவே தன் அன்னையின் முகத்தில் சமுத்திரன் திருமணம் சம்பந்தமாக மகிழ்ச்சி இருந்தாலும் சமுத்திரனை மாப்பிள்ளை கோலத்தில் பார்க்கும் பொழுதெல்லாம் அவர் கண்கள் தானாக பவித்ரன் இடம் வந்து நின்றதை அவனும் கண்டு கொண்டான் தான்.
அவர் மனதில் தன் மகனுக்கு இப்படி ஒரு நல்லது பண்ணி பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம், ஆதங்கம், தவிப்பு எல்லாம் இருந்தது அவனுக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் இன்று ஏனோ ரொம்பவும் ஒடிந்து போய் இருக்க, அவரை அப்படி காண அவனுக்கு தாங்கவில்லை.
இப்பொழுது பத்மாவதி இன்னுமே வேதனையுடன் தன் மனக்குறையை சொல்ல, அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தான்.
எல்லாவற்றிலும் தன் அன்னையின் விருப்பத்தை நிறைவேற்றும் அவனால் இந்த ஒரு விஷயத்தில் அவரின் விருப்பத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லை தான்.
ஆனால் மற்ற எதிலுமே அவனிடம் எதுவும் எதிர்பார்க்காத பத்மாவதி அவன் திருமண விஷயத்தில் மட்டும் தான் அவனிடம் அவரும் கையேந்தி நின்றது.
என்ன செய்வது? என்று குழப்பத்துடன் நெற்றியில் விழுந்த யோசனை முடிச்சுகளுடன் எதுவோ சிந்தித்துக் கொண்டிருந்த தன் மகனை ஓரக் கண்ணால் பார்த்தவர் நெடுமாறன் சொல்லி கொடுத்த டயலாக் எல்லாம் நினைவு வர, தன் நாடகத்தை ஆரம்பித்தார்.
“பவி கண்ணா…அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்வேன். எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்க முடியும். நீ எப்படியோ உன் மனதை கல்லாக்கிக் கொண்டு வாழ்ந்து விடலாம்.
ஆனால் உன்னை இப்படி தனிமரமாய் பார்க்க பெற்றவர்கள் எங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? இதுதான் நீ எங்களுக்கு செய்கிற மரியாதையா?
மற்றவர்களை போல நீயும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என்று நம் சந்ததியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டாமா?
உன் பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுவிடேன். திருமணம் செய்ய ஒத்துக் கொள் கண்ணா…இதுதான் இந்த அம்மாவின் ஆசை, வேண்டுகோள்...“ என்று அவனிடம் இறைஞ்சலுடன் கேட்க அவனுக்கோ தர்மசங்கடமாகி விட்டது.
எத்தனை நாட்கள் தான் தன் அன்னையை இப்படி வேதனைப் படுத்தி பார்ப்பது என்று
Interesting update ma'am 👏👏👏👏👏👏
Thank you.
Rompa interestingaa pohuthu ma'am