ஆனந்தி பொண்ணின் திருமணத்தை நெடுமாறன் தான் ஏற்பாடு செய்து முன்னின்று நடத்த, சமுத்திரன் பக்கமாய் அவன் அண்ணன் பவித்ரன் எல்லா வேலையும் தலைமையேற்று செய்து வந்தான்.
பவித்ரனை பார்த்ததும் நெடுமாறனுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. பெரிய இடத்துப் பிள்ளை என்ற பந்தா எதுவும் இல்லாமல் எளிமையாகவும் அதே நேரம் தன் ஆளுமையில் அத்தனை பேரையும் ஆட்டி வைக்கும் அவனின் சாமர்த்தியத்தையும் கண்டு வியந்து தான் போனார்.
அவனுடைய நயமான சாதுர்யமான பேச்சால் எதிரியாய் பாவித்த தன் மூத்த மகளை கூட அவர் மனம் திருந்தி ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டான்... கெட்டிக்காரன் தான் என்று உள்ளுக்குள் மெச்சிக்கொண்டார்.
கூடவே கம்பீரமாய் ராஜகுமாரனை போன்ற அவனின் தோற்றமும் கண்டு கூடுதல் உற்சாகம் வந்துவிட்டது.
“இவனை விட பொருத்தமான மாப்பிள்ளை நான் மட்டும் எங்கே இருந்து கொண்டு வந்து நிறுத்தி விட முடியும்... இவன் தான் என் மகளுக்கு பொருத்தமானவன்.” என்று முடிவு செய்துவிட்டார்.
அதோடு தான் யாரை கை காட்டி சொன்னாலும் கழுத்தை நீட்டுவதாக சொல்லி இன்றுவரை அதையே பின்பற்றும் தன் இளைய மகளுக்கு தி பெஸ்ட் மாப்பிள்ளையாக பார்க்கவேண்டும் என்று தான் இத்தனை நாளாக சல்லடை போட்டுத் தேடி வந்தார்.
அப்படிப் பட்ட ஒருத்தன் அவர் அருகிலேயே இருக்க, விட்டுவிடுவாரா நெடுமாறன்...
அவனையே தன் மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.
அதோடு அவனின் ஜாதகத்தை கேட்க சங்கடபட்டு கொண்டு அவனுடைய பிறந்தநாள் தேதியை கேட்டுக் கொண்டு கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்று அவன் பிறந்த தேதியை வைத்து அவனுடைய ஜாதகத்தை அவராகவே ரெடி பண்ணி தன் மகளின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பொருத்தம் பார்க்க, இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று எல்லா பொருத்தமும் அம்சமாய் பொருந்தி வந்தது.
அதை பார்த்ததும் இன்னும் மகிழ்ச்சியாகி போனார். அவன் தான் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை என்று உறுதியாய் முடிவு செய்து கொண்டார்.
ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தார். ஏனோ அவர் நேரடியாக சென்று பையன் வீட்டில் பேசுவது சரி வராது என்று எண்ணிக் கொண்டாலும் பத்மாவதி வீட்டாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.
பத்மாவதியின் முகத்திலும் பேச்சிலும் இருந்தே அவருக்கும் மிருணாவை பிடித்துவிட்டது
Interesting update ma'am 👏👏👏👏👏👏
Thank you.
Rompa interestingaa pohuthu ma'am