ஆம்...அவர்தான் காரணம்...யாருக்கும் அசைந்து கொடுக்காமல் தன் வாழ்க்கை குதிரையை தன் கையில் பிடித்துக் கொண்டு அதை சரியாக செலுத்தி கொண்டு இருந்தவன் இப்பொழுது தன் குதிரையின் லகான் தன் அன்னையின் கைக்கு சென்று விட்டதாய் உணர்ந்தான்.
ஆமாம்...இப்பொழுது அவன் அன்னை தான் அவன் வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் கேட்டதற்கு அவன் தலையை ஆட்டி வைத்து விட்டான்.
இப்பொழுது யோசித்தால் ஏன் அப்படி ஒரு முடிவிற்கு சம்மதித்தேன் என்று அவனுக்குள்ளே அரற்றிக் கொண்டிருந்தான்.
அவன் சம்மதித்ததை விட, அவர் நயமாகப் பேசி அவனிடம் சம்மதம் வாங்கி விட்டார் என்று தாமதமாகத்தான் புரிந்தது.
ஆனால் இப்பொழுது குதிரையின் லகானை அவர் கையில் கொடுத்துவிட்டு அதை திருப்பி வாங்கிக் கொள்ள முடியவில்லை அவனால். ஏன் அப்படி செய்தேன் என்று மீண்டும் அவன் நினைவுகள் சென்ற வாரத்திற்கு சென்று நின்றது.
பத்மாவதி மற்றும் கலாவதி இருவரும் அக்கா தங்கைகள். வேலூரை அடுத்து இருந்த வேலாயுதம்பாளையம் அவர்களின் சொந்த ஊர்.
அவர்கள் தந்தை ஒரு விவசாயி. அவருக்கு இருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து வந்தார். அதில் வரும் வருமானத்தில் தன் இரு மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார்.
பெண் பிள்ளைகள் தானே என்று வீட்டோடு நிறுத்தி விடாமல் அவர்கள் விருப்பபட்ட படிப்பை படிக்க வைத்தார்.
பத்மாவதி தன் கல்லூரி படிப்பை முடித்திருக்க, அவரை ஒரு திருமணத்தில் கண்டு பிடித்து போய் விட தேடி வந்து மணந்து கொண்டார் சதாசிவம். திருமணத்திற்கு பிறகு மதுரையில் குடியேறி விட்டார் பத்மாவதி.
அதே போல கலாவதியை கரூரில் மணம் முடித்து கொடுத்திருந்தனர். பத்மாவதிக்கு பவித்ரன் மற்றும் எழிலிசை என்று இரண்டு பிள்ளைகள். கலாவதிக்கு சமுத்திரன் மட்டுமே ஒரே மகன்.
தங்கள் திருமணத்திற்குப் பிறகும் அக்கா தங்கை தங்களுக்குள் போட்டி , பொறாமை இல்லாமல் இருவருமே கூடுதல் நெருக்கத்துடன் தான் பழகி வந்தனர்.
அதுவும் கலாவதிக்கு பவித்ரன் என்றால் ரொம்பவும் உயிர். அதேபோல பத்மாவதிக்கு சமுத்திரன் தான் ரொம்ப செல்ல மகன். சமுத்திரன் அவன் பெற்றோர்களிடம் இருந்ததை விட பத்மாவதி இடம் தான் அதிகம் ஒட்டி கொள்வான்.
Interesting update ma'am 👏👏👏👏👏👏
Thank you.
Rompa interestingaa pohuthu ma'am