“உனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை. உன் தம்பியை பாரு உன்னை விட சிறியவன். காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப் போறான்.
நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாய்? “ என்று விசாரணையில் ஆரம்பித்து அறிவுரைகளை வாரி வழங்குவதில் முடித்தனர் பலர்.
அதைக் கண்டு கடுப்பாக வந்தது பவித்ரனுக்கு. ஆனாலும் எதுவும் சொல்லாமல் சமாளித்து சிரித்து விட்டு நகர்ந்து விடுவான்.
அவனால் மற்றவர்களின் பேச்சை ஒதுக்கி விட்டு விலகி செல்ல முடிந்தாலும் அவன் அன்னை பத்மாவதி யும் இதே மாதிரி விமர்சனங்களுக்கு ஆளாவதை அவனால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஒவ்வொருவரும் துக்கம் விசாரிப்பது போல ஏன் உங்க பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று கேட்கும் போதெல்லாம் அவர் முகத்தில் அவரையும் அறியாமல் ஒரு வேதனை கோடு தழுவிச் செல்லும்.
கருணை மிகுந்த அவர் கண்களிலும் ஒரு இயலாமை வந்து போகும். அதை கண்டு பவித்ரனுக்கு மிகவும் வேதனை ஆகிப் போனது.
தன்னால் தான் தன் அன்னைக்கு இப்படி ஒரு பிரச்சனை என்பது புரிகிறதுதான். ஆனால் அதற்காக அவனுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ள விருப்பமில்லை.
தன் வாழ்வில் எந்தப் பெண்ணிற்கும் இடமில்லை என்று அறைந்து சாத்தியிருந்த மனக்கதவை எப்படி திறப்பதாம்...
“நோ...வே...அது ஒருக்காலும் நடக்காது... “ என்று தனக்குள்ளே சிலிர்த்து கொண்டவன், மற்றவர்கள் ஏதாவது சொன்னால் சொல்லி விட்டு போகட்டும்.
அவர்களால் முடிந்தது அதுதான். அதற்காக என்னுடைய வாழ்க்கையை யார் கையிலும் அடகு வைக்கத் தயாராக இல்லை...” என்று தலையை சிலுப்பிக் கொண்டவன் தன் தம்பியின் திருமணத்தில் கவனத்தை செலுத்தினான்.
ஆனால் அப்படி விட்டுவிடுவாரா நம் மதிப்பிற்குரிய விதியார்.!
பவித்ரன் என்னதான் என் வாழ்க்கை இப்படித்தான் என்று திட்டமிட்டிருந்தாலும் அதை செயல்படுத்துவது அந்த விதியார் ஆயிற்றே..!
அவரை மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஒவ்வொருவர் பிறக்கும் பொழுதே இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று அந்த ஆண்டவனால் விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாதே. மானிடர்கள் எல்லாரும் அவன் போட்டு வைத்த நாடக காட்சியைத்தான் நடித்து
Interesting update ma'am 👏👏👏👏👏👏
Thank you.
Rompa interestingaa pohuthu ma'am