மதுரை:
தூங்காநகரம் என்று பெருமையாக அழைக்கப்பட்ட மதுரை மாநகரம் அது.
நடுநிசியில் கூட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாநகரம் அதி காலையிலேயே இன்னும் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
அப்படிபட்ட சுறுசுறுப்பான மக்களில் ஒருவனாய், அதிகாலையிலேயே எழுந்து காலை உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு கையில் ஆவி பறக்கும் காபியுடன் பால்கனியில் நின்றிருந்தான் பவித்ரன்.
அவன் பார்வை கிழக்கு திசை நோக்கி இருந்தது. அப்பொழுதுதான் தன் துயில் கலைந்து சோம்பலை விரட்டி தன் அன்றாட பணியை செய்ய எழுந்து வந்து கொண்டிருந்தான் ஆதவன்.
எப்பொழுதும் இந்த சூரிய உதயத்தை பார்க்கும் பொழுது பவித்ரன் மனதுக்குள் ஒரு இனம் புரியாத பரவசம் படரும்.
கம்பீரமாக எழுந்து வரும் அந்த ஆதவனையே நீண்ட நேரம் மெய்மறந்து ரசித்து பார்த்திருப்பான்.
இன்றும் அப்படித்தான் அந்த ஆதவனைத்தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஆனால் அவன் பார்வையில் வழக்கம் போல இருக்கும் ரசிப்புத்தன்மை இல்லை.
மாறாக எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது அவன் கண்கள். கூடவே உடல் விறைக்க கை முஷ்டி இறுகி இருக்க, முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு தாடைகள் விடைக்க அவன் அணிந்திருந்த டிராக் பேண்டிற்குள் ஒரு கையை விட்டுக் கொண்டே மறு கையால் காபியை பருகியவாறு தொலைவில் தெரிந்த இளம்மஞ்சள் வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் வாழ்வில் எது நடக்கக் கூடாது என்று எண்ணி இருந்தானோ, எதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாய் இருந்தானோ, அந்த பிடிவாதம் தகர்ந்து விட்டது போல அவன் மனம் அரற்றி கொண்டிருந்தது.
தன் வாழ்க்கை தன்னை மீறி வேற பக்கம் செல்வதை போல மனதிற்குள் வெறுப்பாக இருந்தது.
“எப்படி சம்மதித்தேன்? நான் எப்படி இதற்கு சம்மதித்தேன்? “ என்று ஆயிரமாவது முறையாக தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் பவித்ரன்.
அதற்கு விடையும் அவனுக்கு தெரிந்தது தான்.
தனக்குள்ளே கேள்வி கேட்ட நொடி அதற்கு விடை சொல்லும் விதமாய் அவன் கண்முன்னே மலர்ந்த புன்னகையுடன் வந்து நின்றார் அவன் அன்னை பத்மாவதி.
Interesting update ma'am 👏👏👏👏👏👏
Thank you.
Rompa interestingaa pohuthu ma'am