சொல்லுங்க கதிர் நான் என்ன பண்ணனும்.
ஆமா தர்ஷீ நீங்க தான் எல்லாமே பண்ணனும். ரெண்டு அண்ணாவும் வேலைக்கு போகணும். தங்கச்சி, அக்கா வீட்டுக்காரர் அப்பப்ப கூட்டிட்டு வந்தா பரவால்ல....எப்பவும் நம்ம வீட்டிலேயே இருக்கிற மாதிரி விட்டுட்டு போயிடுறாங்க. என் தங்கச்சி, அக்காவ பார்க்க எனக்கு கஷ்டம் இல்லை. சந்தோஷமா தான் பாத்துட்டு இருக்கேன். ஆனா புருஷனுக்குனு ஒரு கடமை இருக்குல்ல. அதை அவங்க ஒழுங்கா பண்ணணுமே.
இப்படி இவங்க நாலு பேருமே அவங்க வாழ்க்கைய பார்த்துக்கிட்டாங்கனா. தம்பிய செட்டில் பண்ண வேண்டியது என்னோட கடமை. அப்பா அம்மாவையும் என்னால நல்லா பாத்துக்க முடியும். கொஞ்சம் சேர்த்து வைக்கவும் முடியும். இவ்ளோ நாள் தனியாக எல்லாத்தையும் பார்த்துகிட்டேன். இப்ப எனக்கு வைஃப் வந்தாச்சு. என் கடமையையும் நான் சரியா பார்க்கனும் தர்ஷீ. அதுக்கு நீங்கதான் ஒரு வழி பண்ணனும். இப்ப போயி நான் எல்லாத்துகிட்டயும் பேசினா.... எல்லாரும் நீங்க வந்த உடனே நான் மாறிட்டேன் தப்பா நினைச்சிருவாங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தர்ஷீ. எல்லாரும் அவங்கவங்க பொறுப்பை உணர்ந்து கடமையை செய்யுற மாறி நீங்க தான் எதாவது பண்ணனும். அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி இருக்கக்கூடாது. எல்லாமே சுமுகமாக முடியனும்ங்க. அதுக்கு தான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்கிறேன்ங்க.
என்ன கதிர் அது என் குடும்பம் விஷயத்த சொல்லிட்டீங்கள..... நான் பாத்துக்குறேன் யூ டோன்ட் வொரி கதிர்.
ஒரு மௌன சிரிப்புடன் இப்பதான்ங்க நிம்மதியா இருக்கு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தர்ஷீ. ஒரு வாரம் நாம இங்கதான் இருப்போம்ங்க. நீங்க எவ்ளோதான் சொன்னாலும் பேசிக் வெசிலிட்டி கூட இல்லாம அந்த வீட்டுல உங்கள வச்சிக்க கஷ்டமா இருக்கு. அதுனால ஃபிரெண்ட் கிட்ட கொஞ்சம் அமெளண்ட் கேட்ருக்கேன். வீட்ல டாய்லெட் கட்டிட்டு தான் உங்கள கூட்டிட்டு போவேன் தர்ஷு.
அப்படினா நான் ஒரு ஐடியா சொல்லவா கதிர்.
சொல்லுங்க தர்ஷு.
உங்க இடத்த வச்சி நான் ஒரு ஐந்து இலட்சம் லோன் எங்க பேங்க -லயே வாங்கி தரேன். வீட்ட கொஞ்சம் எக்ஸ்பண்ட் பண்ணலாம். படுக்கக் கூட வசதி இல்லாம இருக்கு. கல்யாணம் ஆனாவுங்களுக்கெல்லாம் கஷ்டம்ல கதிர். அதனால ரெண்டு ரூம், டாய்லெட் பாத்ரூம் கட்டி, கொஞ்சம் வீட்ட புதுசாக்கலாம் கதிர். என்ன சொல்றீங்க.
அப்படின்னா மாசம் எவ்வளவு கட்டுற மாதிரி வரும் தர்ஷீ.