பாடலையே”
”ஓ அதுவா அன்னிக்கு கூச்சமா இருந்தது அதான் பாடலை இப்ப வேணா பாடவா”
”ஓ தாராளமா” என சொல்ல அவனும் சிரித்தபடியே அழகாக பாடினான்
அந்த பாட்டில் மெய்மறந்துப் போனாள் தாமரை.
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(இதயம்..)
ஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
(இதயம்..)
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதங்கள்
ராம நாமன் மீதிலே நாடத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம்..)
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேறும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேரம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதுயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
இதயம் ஒரு கோவில்