கோஷமிட அதைக்கண்ட கீர்த்தியும்
”ஆமாம் நாங்க போராடுவோம்” என சொல்ல அதைக்கண்ட தரணியோ
”ஏய் அறுந்தவாலுங்களா சேட்டையா பண்றீங்க, ஓய் கீர்த்தி கந்தசாமி பொண்ணுதானே நீ, என்கிட்ட அடிவாங்கிடாத, இவளை நீதான் கூட்டிட்டு வந்தியா, வந்ததும் வந்தியே ஒழுங்கா விவரத்தை சொல்லி கூட்டிவராம தப்பு தப்பா சொல்லி கூட்டிட்டு வந்துட்டு கோஷமா போடற, ஒழுங்கா அவளை கூட்டிட்டு போயிடு இல்லாட்டி அவ்ளோதான் கிளம்பு இல்லை உன் அப்பாவை நான் இங்க கூப்பிடுவேன்” என மிரட்ட அதில் கீர்த்தி பயந்தேவிட்டாள் சட்டென தமிழிடம் ஒட்டிக் கொண்டாள்.
”ஏய் வாடி போலாம், அப்பா வந்தா திட்டுவாரு வா போலாம் வா வா” என அழைக்க தமிழோ வர மறுத்தாள்
சட்டென தமிழோ பரணியின் கையை பிடித்துக் கொண்டு இழுத்தாள்
”நீங்க வாங்க நாம போலாம், நான் உங்களையும் என் அக்காவையும் சேர்த்து வைக்கிறேன், ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கிறேன் நீங்க வாங்க, நான் உங்களை நல்லா பார்த்துக்கறேன் வாங்க” என இழுக்க அதைக்கண்ட கீர்த்தியும் பரணியின் இன்னொரு கையை பிடித்து இழுத்தாள்.
உடனே தரணி நடுவில் நுழைந்து பரணியை காப்பாற்றியவன் தமிழிடம்
”முடியாது நாங்க இதுக்கு ஒத்துக்க மாட்டோம், திருட்டுத்தனமா கல்யாணம் செய்றதா, செல்லாது செல்லாது ஊரறியதான் கல்யாணத்தை நடத்துவோம்”
”நீ என்னடா சொல்றது நான் முடிவு பண்ணிட்டேன், உனக்கு என் அக்கா கிடையாது போடா அப்படி” என திட்ட அதற்கு தரணியும் சரிக்கு சரியாக நின்று அவளிடம் வாதாட இதில் பரணியே குழம்பியிருந்த தன் வீட்டாரிடம் நடந்தவற்றை தெளிவாக கூறிய பின்புதான் அவர்கள் சற்று நிம்மதியானார்கள்.
ஆனால் இங்கோ தரணியும் தமிழும் பலத்த வாய் சண்டையில் இருந்தார்கள் முடிவில் தரணி அவளிடம்
”இதப்பாரு ரெண்டு வீட்டுக்கும் பிடிச்சி போய்தான் நிச்சயம் வரைக்கும் பேசி முடிச்சாங்க, இப்ப வந்து மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொன்னா எப்படியாம், எங்க ஊருக்கே வந்துட்டு மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொல்ற, இந்த கல்யாணம் நடக்கலைன்னா எங்க வீட்டு மானம் என்னாகிறது, எல்லாம் குறிச்சி வைச்ச தேதியில நிச்சயம் நடக்கத்தான் போகுது, உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க, கிளம்பு இங்கிருந்து, திடீர்ன்னு வந்து குதிச்சிட்டு தனியா ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வைக்க பார்க்கறியா, இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் போ வெளிய” என விரட்ட அவளோ பரணியை பார்த்து