சொல்லி சிரிக்க அதைக்கேட்டு தாமரையும் கவலையை மறந்து சிரித்தாள்.
”சரி நான் வைச்சிடறேன்” என சொல்லி போனை வைத்துவிட தரணியும் பரணியிடம் தாமரை சொன்னவற்றை சொல்ல அவனும் தெளிவுக்கு வந்தான்
”அப்ப தமிழுக்கு விளக்கமா புரிய வைச்சிட்டா பிரச்சனை முடிஞ்சிடும்”
”அதேதான் ஆனா அவள் புரிஞ்சிக்கனுமே” என்றான் கவலையாக
”ஏன் கவலைப்படற”
”அவள் நான் சொல்றதை கேட்க மாட்டா பரணி, நீயே அவள்ட்ட புரியற மாதிரி சொல்லு அப்பவாவது அவள் புரிஞ்சிக்கிறாளான்னு பார்க்கிறேன், அப்படியே அவளை பத்திரமா ஊருக்கு அனுப்பி வைக்கனும்னு அண்ணி சொன்னாங்க”
”அதை நான் பார்த்துக்கறேன் வா அவளை போய் பார்த்து பேசிடலாம்”
”ஆமாம் வா வா” என இருவரும் தமிழ்செல்வியை காண சென்றார்கள்.
மறுபக்கம் தமிழ்செல்வியோ சாப்பிட்டு முடித்ததும் தாத்தாவிடம் வந்தாள். அவரும் அவளிடம் நல்லபடியாகவே பேசினார்
”என்னம்மா சாப்பிட்டியா”
”சாப்பிட்டேன் தாத்தா”
”அப்புறம் வீட்ல என்ன சொன்னாங்க நிச்சயத்தை பத்தி ஏதாவது விசயம் சொன்னாங்களா”
”தாத்தா எனக்கு இந்த நிச்சயத்தில விருப்பம் இல்லை தாத்தா”
”என்னம்மா சொல்ற”
”ஆமாம் தாத்தா எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலை தாத்தா” என்றாள் அதைக்கேட்ட கனகலட்சுமியோ
”என்ன உளர்ற நீ”
”ஆமாம் பாட்டி எனக்கு அவரை பிடிக்கலை” என சொல்ல கௌரியோ
”ஏன் அவனுக்கென்ன குறைச்சல் எதுக்கு பிடிக்கலைங்கற“
”என் அக்காவுக்கு ஏத்த மாதிரி அவர் இல்லை அத்தை”
”அப்படியா ஆனா உன் வீட்ல எல்லாருக்குமே என் பையனை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களே, உன் அக்காவும் அப்படித்தானே சென்னாங்க” என மாணிக்கம் சொல்ல
”இல்லை மாமா எனக்குமட்டும்தான் பிடிக்கலைன்னு சொல்ல வந்தேன்”
”ஏன் என்ன காரணம்” என தாத்தா கேட்க
”தாத்தா என் அக்காவுக்காக நான் வர போற மாப்பிள்ளை எப்படியிருக்கனும்னு கற்பனை செஞ்சி சொல்லி வைச்சேன், அது போல உங்க பேரன் இல்லை தாத்தா“