”அப்படி என்ன கற்பனை செஞ்சி வைச்ச, எங்க சொல்லு கேட்போம்” என கௌரி கேட்க உடனே தமிழும் தனது எண்ணத்தை வெளிப்படையாக சொன்னாள்
”அக்காவுக்கு வர போற கணவர் பார்க்க அழகா இருக்கனும், உயரமா இருக்கனும், பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கனும், பெரிய பதவியில இருக்கனும், டீசன்டா இருக்கனும், அன்பா இருக்கனும், ஊரே மெச்சிக்கற மாதிரி இருக்கனும்” என வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தாள்
டிபன் சாப்பிட்ட தெம்பில் அவள் பேச பேச கூட கீர்த்தியும் ஏதும் பேசவில்லையானாலும் தமிழ் சொல்ல சொல்ல தலையை மட்டும் மேலும் கீழும் ஆம் என்பது போல் ஆட்டிக் கொண்டிருந்தாள்.
அவ்விடம் வந்தனர் பரணியும் தரணியும், தமிழ் சொல்வதைக் கேட்டு வியந்தார்கள் அதை விட அவள் சொல்வதைக் கேட்டு வீட்டினர் குழம்பியிருப்பதைக்கண்டு நொந்துப் போனார்கள்.
பரணி வந்து நின்றதும் தமிழ் சட்டென அவனிடம் சென்று நின்று அவனின் கையை பிடித்துக் கொண்டு தாத்தாவிடம் வந்தவள்
”எனக்கு இவரைதான் பிடிச்சிருக்கு, என் அக்காவுக்கு ஏத்த மாதிரி இவர்தான் இருக்காரு, இவரை என் அக்காவுக்கு பேசி முடிங்க தாத்தா, என் அக்காவோட அழகுக்கு படிப்புக்கு ஏத்த மாதிரி இவர்தான் இருக்காரு, எனக்கு இவர்தான் வேணும் தாத்தா, ப்ளீஸ் தாத்தா, இவர்கூட என் அக்காவை நிச்சயம் செய்ங்க தாத்தா ப்ளீஸ் தாத்தா” என அவள் கைகூப்பி கெஞ்சி கேட்க கூடவே கீர்த்தியும் கைகூப்பி கெஞ்சுவது போல பார்த்து வைக்க விசயம் அறியாத பெரியவர்கள் குழம்பினார்கள்
தரணியோ தமிழின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். பரணியோ தமிழை நினைத்து வருந்தினான்.
தமிழும் குழம்பி மற்றவர்களையும் நன்றாக குழப்பி விட்டதில் தாத்தாவோ பரணி தரணி இருவரையும் பார்த்து
”என்ன இதெல்லாம்” என சட்டென சத்தம் போட்டுவிட அவர்கள் இருவரும் அதிர்ந்தார்கள்.
உடனே தரணி தாத்தாவிடம் வந்து
”ஒண்ணுமில்லை தாத்தா என்ன ஏதுன்னு நான் விளக்கமா சொல்றேன்” என சொல்லவர அதற்குள் தமிழோ தரணியை கைகாட்டி தாத்தாவிடம்
”தாத்தா எனக்கு இவனை பிடிக்கலை தாத்தா, எனக்கு இவன் வேணாம், எங்க குடும்பத்துக்கும் இவன் வேணாம், இவன் கெட்டபையன், இரக்கமில்லாதவன், எல்லாரையும் அடிக்கிறான், காட்டுமிராண்டி போல நடந்துக்கறான், முரடன்” என வரிசையாக சொல்ல உடனே அவளை