“அஜய், இனி உங்க அம்மா இங்கே தான் இருக்க போறாங்க , என்னம்மா தனம்,
நான் சொல்றது சரிதானே?”
“ சரிதான் அங்கிள், நான் இங்கேயே இருக்கேன், உனக்கு ஏதாவது பிராப்லம் இருந்தா சொல்லு அஜய்.”
“ ஐயோ, அம்மா எனக்கு ரொம்ப…. அம்மா எனக்கு ரொம்ப சந்தோஷம்மா!”
“எனக்கு, என்னோட சொத்து திரும்ப கிடைச்சிருக்கு, நான் இனிமேல் எந்த காரணத்துக்காகவும் உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் “ என்றாள் உணர்ச்சி பொங்க கண்களில் கண்ணீருடன்.
அதை பார்த்த அஜய்,” நானும் உன்னை இனிமே பிரிய மாட்டேன்ம்மா.” என்று அவளை அனைத்துக்கொண்டான்.
நிக்கத்தின் கண்களிள் கண்ணீர், பாவம் இந்த பெண், இவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? இந்த பெண்ணின் வருங்காலம் என்ன, ‘ஹே அல்லா இவளுக்கு ஒரு நல்ல வழி காமிங்க அல்லா, என் துவாவ ஏத்துக்கங்க, இந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கைய கொடுங்க’என்று மனமுறுக வேண்டிக் கொண்டார்.
“என்ன ஆண்டி ஏதோ மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா? வாங்க ரெஸ்ட் எடுங்க கொஞ்ச நேரம், பிறகு சரியாயிடும். " என்றாள் தனம் நிக்கத்தின் மன நிலை அறியாமல்.
“அதெல்லாம் வேண்டாம்மா, உடம்புக்கு ஒண்ணுமில்ல, வாங்க வீட்டை சுத்தி பாக்கலியே, இது உங்க வீடு இல்ல, பாக்க வேணாமா?'" என்று நிக்கத் பேச்சை மாற்றி அவர்களுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தார்.
வீடு ரொம்ப பெரிதாக, அழகாக இருந்தது. கீழே பெரிய ஹால், வலது புறம் டைனிங் ரூமும் அதை ஒட்டி சமையலறையும், பின் புறம் வேலை செய்ய வசதிகளும், ஹாலின் இடது புறம், இரண்டு பெட் ரூமும் அதை ஒட்டி பாத்ரூமும் இருந்தது, மாடியில், மூன்று பெட்ரூமும் எல்லா அறையையும் ஒட்டிய பாத்ரூமும் அங்கு ஒரு ரூம் ஆபிஸ் ரூமாக உபயோகப் படுத்தும் வகையில் இருந்தது
வீடு படு அமர்களமாகவும், எல்லா ரூமிலும் மூன்று கட்டில்களும் படுக்கைகளும், அஜய்க்கு மட்டும் தனி அறையில் சகல வசதிகளும் செய்திருந்தார் ஜாபர்.
"வீடு ரொம்ப அசத்தலாயிருக்கு! " என்றாள் தனம்
" ஆமாம்மா, சரியா சொன்னீங்க , ஆனா எங்களுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு? எங்களுக்கு ஒரு ரூமே பெரிய விஷயம்!" என்றான் அஜய்.
" பார்த்தியா தனம்மா இவனோட மதிப்பு இவனுக்கே தெரியல. அஜய் இது நீ சம்பாரிச்ச
VJG
VJG
VJG
Abdul oda life Ini enna aaga pogudhu?? 🤔
Thanam and Abdul meet panvangala??
Athena Unga name VJG??.. Full form??..
Waiting for next episode...
My name is vijiG.