(Reading time: 23 - 46 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

கலந்துக்கனும்னு, நான் கடவுள் கிட்ட வேண்டிக்கறேன். "

"நல்ல புத்திசாலி பையன்!" என்று திருஷ்டி கழித்தார்.

பிறகு தனமும், அஜயும் சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டனர், பிறகு நிக்கத்துக்கும்  மற்ற பையன்களுக்கும், அஜய் ஜாபருக்கும் ஊட்டி விட்டு, கொண்டாடினார்கள். எல்லோரும் சாப்பாடு சாப்பிட்ட பிறகு, ஜாபர், "நாங்க கிளம்பறோம்மா தனம், நீங்க ஜாக்கிரதையாக இருங்க. " என்று " நிக்கத் கிளம்பலாமா? மணி ஆயிடுச்சு பார்!" என்றார்.

நிக்கத்துக்கு அஜயை விட்டுப் போக எப்போதுமே மனசு வராது, அவர் மகனை போலவே இருக்கிற அவனை விட்டுப் போக எப்படி மனசு வரும்.

"சரி தனம் நாங்க கிளம்பறோம், ஏதனாலும், எனக்கு போன் செய்யும்மா!" என்று அஜயை அணைத்துக்  கொண்டு, அவனை உச்சி முகர்ந்தார்,

அவர்கள் போகும் வழியில், " என்னங்க உங்களோடு பேசவே நேரமில்ல, ஒரு வாரம் முன்னால, நம்ம அபு என்கிட்டே விஷயத்த  சொன்னான், ரொம்ப அழுதான், நாம ஏதாவது செய்யனுங்க.... "என்றார் நிக்கத்

" என்ன சொன்னான், எந்த விஷயம்?" என்று கேட்டார் ஜாபர்.

அவரும் விஷயத்தை சொல்ல, அவர் மனதும் வேதனை அடைந்தது,

என்னங்க இந்தப் பெண்ணுக்கு ஏதாவது நல்லது நடக்கனுங்க, இது பெரிய பாவம்க, இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா, அவனுக்கு நிக்காவை செய்யாம இருந்திருக்கலாம், இந்தப் பொண்ணோட வாழ்க்கை போயிடுச்சேங்க, ஏதாவது செய்யணும்." என்று புலம்பிக் கொண்டிருந்தார் நிக்கத்.

"இத பார், அந்தப் பெண்ணுக்கு நல்லதே நடக்கும், அல்லாவுக்கு தெரியும் எந்த நேரத்துல செய்யனும்னு, இப்ப பையன சேர்த்து வச்சிருக்கு அதே மாதிரி அதுக்கு வாழ்க்கையும் நல்லா அமையும் நீ கவலபடாதம்மா நிக்கத், " என்று தன் மனைவியை ஆறுதல் படுத்தினார்.

நிக்கத்தும் கொஞ்சம் தெளிவடைந்தார், இருந்தாலும் உள்ளுக்குள் பெரிய தப்பு நடந்திருக்கு இது எப்படி சரியாகுமென்று வருந்தினார்.

தன் மகன் பாவச் சுமையை சுமந்துக் கொண்டிருக்கிறான், அவரால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும், இது ஒரு பெண்ணுக்கு இழைத்திருக்கும் தீங்கு, எப்படி நிம்மதியோடு இருக்க முடியும், அதை ஜாபரிடமும் கூறினார்.

"தெரியும்மா நீ எவ்வளவு வேதனை படுறியோ அதே அளவு எனக்கும் இருக்கு. ஆனால் நாம் வேதனைப் பட்டா எதுவும் சரியாய் போயிடுமா, அததுக்கு ஒரு நேரம் வரும், வரும் போது, எல்லாத்துக்கும் தீர்வு தானே வரும். "

வீடு வந்து சேர்ந்தார்கள், வாசலிலேயே காத்திருந்தான், அப்துல், " என்ன அபூ தூங்கலியா,

12 comments

• Thanks Fathima! Hope further episodes will interest you more. Looking forward to your continued feedbacks.
My name is vijiG.
• Thanks Ravai. Your words of appreciation is very encouraging. Looking forward your support in upcoming episodes too.

VJG
• :clap: arumaiyaana epi mam.interesting aaga poguthu kathai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
• Hi VJG good morning semma update eagerly waiting for next epi eni epti story move akum🤔
• Good morning, dear VGJ! உங்கள் திறமை, பிரமிக்க வைக்கிறது! மாறுபட்ட சூழ்நிலைகள்! மதங்கள்! மனங்கள்! பருவங்கள்! You are indeed a great capable writer! Hearty congrats!
• Nice episode ma'am :hatsoff: . Vaasikum pothe rompa kalavalaiya iruku :sad: . Koodiya seekiram ellar vaalvilum santhosham varanum :yes: . Waiting for next episode ma'am :-) .
• Story moving interesting...
Abdul oda life Ini enna aaga pogudhu?? 🤔
Thanam and Abdul meet panvangala??
Athena Unga name VJG??.. Full form??..
Waiting for next episode...

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.