”சொல்லு சக்தி”
”இந்த சென்னையில வாழ்ந்தது போதும் பாரதி” என்றாள் அதைக்கேட்டு திடுக்கிட்டான் பாரதி
”ஏன் சக்தி”
”போதும்னு தோணுது”
”அதான் ஏன்”
”இங்க நம்மளை வாழ விடமாட்டாங்க பாரதி”
”என்ன சொல்ற சக்தி எனக்குப் புரியலை”
”நாம ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்தா யாருக்கும் பிடிக்காது, எதையாவது சொல்வாங்க நம்மளை பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும், இவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும்னு நினைச்சேன் ஆனா, இவங்கள்லாம் ஒரு ஆளுங்களான்னு நினைச்சப்ப என் முடிவை மாத்திக்கிட்டேன், இங்க இருந்து இவங்க முன்னாடி வாழ்ந்து அதைப் பார்த்து அவங்க வயிறு எரியறது எனக்கு பிடிக்கலை அவங்களுக்காக நாம ஏன் வாழனும் நாம சந்தோஷமா வாழனும் பாரதி”
”எனக்குப் புரியலை சக்தி”
”நாம வேற எங்கயாவது போய் வாழ்ந்துக்கலாம், இங்க இருந்தா ஏதாவது ஒரு இடத்தில நம்ம பழைய வாழ்க்கை முன்னாடி வந்து நிக்கும் வேணாமே” என கெஞ்சும்படி சொல்ல பாரதி யோசிக்கலானான்.
”சக்தி நான் கொஞ்சம் யோசிக்கனும்“ என்றான் அமைதியாக
”தாராளமா யோசிங்க பாரதி, இப்ப நாம கிளம்பலாம் நாளைக்கு ஆபிஸ் இருக்கு நமக்காக எல்லாரும் காத்திருப்பாங்க, காலம் முழுக்க நம்மளை பத்தி தெரிஞ்சவங்க முன்னாடி பார்த்து பார்த்து வாழறதுக்கு நம்மளை பத்தி தெரியாத மக்களோட மக்களா நாம வாழனும்ங்கறதுதான் என் எண்ணம், என் விருப்பமும் கூட, இதுல உங்களுக்கு விருப்பமில்லைன்னா வேணாம் நாம இப்ப எப்படியிருக்கோமோ அப்படியே இருக்கலாம்” என சொல்ல அதைக்கேட்டு பாரதி மெல்ல தலையாட்டிவிட்டு
”எனக்கு டைம் கொடு சக்தி, சட்டுன்னு ஒரு முடிவு எடுக்க முடியலை, நீ சொன்னதை பத்தியும் யோசிக்கனும், கூடவே மத்த விசயத்தை பத்தியும் யோசிக்கனும்”
”தாராளமா யோசிங்க பாரதி, நான் முடிவு எடுத்துட்டேன், நீங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் கட்டுப்படறேன்” என சொல்லிவிட பாரதியும் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்டலில் இறக்கி விட்டுவிட்டு தன் மேன்ஷனுக்கு வந்து சேர்ந்தான்.
சக்தி சொன்னதையே பலவிதமாக யோசிக்கலானான். கையில் எவ்வளவு பணம் இருக்கிறது
Thank you.