”ம் சரி நான் போறேன்”
”சக்தி”
”ம்”
”எல்லாம் உனக்காகதான்”
”ம் சரி”
”உனக்கு சந்தோஷமா இல்லையா”
”நீங்க முன்னாடியே பாரின் போயிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன் இப்ப நீங்க போறதை நினைச்சி வருத்தப்படறேன் ஆனா பரவாயில்லை ஒரு வருஷம்தானே அங்கயே இருந்துட மாட்டீங்களா“ என ஏக்கத்துடன் கேட்க அவனோ
”என் உசுரே நீதான் சக்தி, உயிர் வாழ உன்கிட்ட வந்துதானே ஆகனும் சக்தி”
என சொல்ல அவளோ என்ன தோணிற்றோ சட்டென அவனை ஒரு முறை அணைத்துவிட்டு மெல்ல சிரித்தாள்
”தாங்ஸ் சக்தி”
”உங்க விருப்பம்தான் என் விருப்பமும்”
”ஓகே ஈவ்னிங் பார்க்கலாம்”
”ம் சரி” என சொல்ல அவனும் லிப்டை ஆன் செய்தான்.
அது கீழே சென்று நின்றுவிட அவளை அனுப்பிவிட்டு மீண்டும் மேல் நோக்கி வந்து தன் வேலையில் இறங்கினான் பாரதி.
சக்தியின் மனதை நன்றாக உடைத்துவிட்டோம் என நன்றாக புரிந்துக் கொண்டான் அவன் மனதும்தான் நொறுங்கியிருந்தது ஆனாலும், சக்தி ஆசைப்பட்ட புது வாழ்க்கைக்கு தேவையான பணத்திற்காகவே விருப்பமில்லாத வேலையை செய்ய துணிந்துவிட்டான் பாரதி.
தன் இடத்திற்கு வந்த சக்தியும் பலவித யோசனைகளுடனே வேலையில் இறங்கினாள்.
மதியம் கான்டீனுக்கு கூட இருவரும் செல்லவில்லை, சாப்பிடவும் இல்லை மாலை நேரம் சக்திக்காக காத்திருந்து அவளை அழைத்துக் கொண்டு பீச்சுக்கு சென்றான் பாரதி. அங்கும் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர பேசிக் கொள்ளவில்லை, மனதளவில் அவர்கள் உடைந்திருந்தார்கள், இப்போது எதை பேசினாலும் சண்டை வரும் அழுகை வரும் எதற்கு என்ற மனப்பக்குவத்தில் நேரத்தை ஓட்டினார்கள்.
வெகுநேரமானதும் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு திரும்பினான். அப்படியே அடுத்த நாளையும் ஓட்டினான். அதற்கடுத்த நாள் ஏர்ப்போர்ட்டில் இருவரும் சந்தித்தார்கள். சக்தி அவனுக்காக எடுத்த உடைகளை தந்தாள்
Thank you.