”பாரதி ஏன் அழறீங்க என்னாச்சி” என கேட்க அவனோ அவளை விட்டு விலகி நின்றான்
”என்னாச்சி பாரதி”
”உன்னை வேற செக்ஷனுக்கு அனுப்பின விசயம் காலையில என் போனுக்கு தகவல் வந்துச்சி உடனே உன்னை பார்க்க வராம ஹெச் ஆரை பார்க்கப் போனேன், எவ்வளவோ பேசினேன் ஆனா அவர் ஒத்துக்கலை சக்தி” என வருத்தமாகச் சொல்ல அதைக்கேட்ட சக்தியோ நொந்துப் போய்
”சே இதானா நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா”
”எனக்கு கஷ்டமாயிருக்கு சக்தி, நீ வந்து பேசினப்ப நான் மனசு உடைஞ்சிப் போயிருந்தேன், அந்த சமயம் நான் எமோஷனலா உன்கிட்ட ஏதாவது இப்படி நடந்துக்கிட்டா மத்தவங்க பார்வையில நீயும் நானும் கேவலமா தெரிவோம், அதான் அந்த இடத்தில என்னை அடக்கி வைச்சிக்கிட்டேன் சக்தி” என சொல்ல அவளின் மனம் அமைதியானது. அவனிடம் மென்மையாக பேசினாள்.
”சரி பரவாயில்லை பாரதி வேற செக்ஷன்ல வேலை பார்த்தா என்ன இங்கதானே இருக்கப் போறேன்”
”நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது சக்தி இது அநியாயம்”
”சரி விடுங்க பாரதி”
”சக்தி நேத்து நீ சொன்னதை பத்தி நான் யோசிச்சேன்”
”என்ன முடிவு எடுத்தீங்க பாரதி”
”நீ சொன்னது சரிதான் ஆனா பணம் இல்லாம புது ஊர்ல வாழ முடியாது சக்தி, அதுக்கு பணம் தேவை அத்தியாவசிய தேவைக்காவது பணம் தேவை சக்தி அதுக்கு நான் சம்பாதிக்கனும்”
”புரியுது”
”எவ்ளோ பணம் தேவைன்னு எனக்கு தெரியலை குறைஞ்சது சில லட்சங்களாவது வேணும்“
”ம் சரி”
”பாரின் ஆபர் ஒண்ணு வந்திருக்கு சக்தி” என சொல்ல அவளுக்கு திக்கென்றது
”பாரதி” என ஈனமாக அழைக்க
”ஒரு வருஷம்தான்”
”ஆனா பாரதி”
”நல்ல சம்பளம் வரும் அது போதும்னு நினைக்கிறேன்”
”வேணாம் பாரதி”
”நாம ரெண்டு பேரும் ஒரு வருஷத்துக்கு பிரிஞ்சியிருக்கறது கஷ்டம்தான், எனக்கு புரியுது
Thank you.