என ஆராய்ந்தான். சிறிது பணமே இருந்தது, 1 வாரம் செலவழிப்பு, துணிமணி எடுத்தது, நகை எடுத்தது என நிறைய பணம் செலவாகியிருந்தது.
இங்கு இருந்து வேறு ஊருக்கு சென்று வாழ நினைத்தாலும் பணம் தேவை, எங்கு சென்றாலும் நல்லபடியாக வாழ வேண்டும், அதற்கு வேலை தேவை என்ன செய்யலாம், போகலாமா இல்லை இங்கேயே இருந்து மற்றவர்களின் முன் வாழ்ந்துக் காட்டலாமா என பலமாக யோசிக்கலானான் பாரதி
மறுநாள் காலையில் சக்தி ரெடியாகி பாரதிக்காக காத்திருந்தாள் ஆனால் அவன் வரவில்லை போன் செய்துப் பார்த்தாள், சுவிட்ச் ஆப் என வரவே அதிர்ந்தாள். எதையோ யோசித்து பின் பஸ்ஸில் தன் ஆபிஸை அடைந்தாள், அங்கு பாரதியை தேட அவனோ வேலையில் மும்முரமாக இருந்தான். அவனின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதைக்கண்டு அதிர்ந்து அவனிடம் சென்று பேச முயல அதற்குள் ஹெச் ஆர் வந்தார்
”சக்தி” என அழைக்க அவளும் அவரிடம் சென்றாள்
”சார்”
”சக்தி உன் ட்ரெயினிங் பீரியட் முடிஞ்சிடுச்சி, நீ உன்னோட பழைய செக்ஷனுக்கு போகலாம்”
”ஓகே சார்” என சொல்லிவிட்டு மற்றவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு பாரதியிடம் வந்தாள். பாரதி அமைதியாக இருக்கவே
”பாரதி” என மெதுவாக அழைக்க அவனோ அவளை பாராமல் வேலையில் கவனமாக இருந்தான்.
”பாரதி” என மீண்டும் அழைக்க அப்போதும் அவனிடம் பலத்த அமைதி அதில் அவளோ நொந்துப் போய் அங்கிருந்து கிளம்பினாள்.
வழக்கம் போல படிக்கட்டில் இறங்கி செல்லலாம் என நினைத்தாள் ஆனால் பாரதியின் திடீர் மாற்றத்தினால் நடக்க முடியாமல் தடுமாறினாள். என்னவாயிற்று பாரதிக்கு என அவளால் யோசிக்க முடியாமல் படிக்கட்டில் கால் வைக்க தடுமாறி விழப் போக பாரதியே அவ்விடம் வந்து அவளை பிடித்து இழுத்து தன்னிடம் நிறுத்திக் கொள்ள அவளோ ஒரு நொடி விழப்போகிறோம் என நினைத்து அதிர்ந்துப் போனாள். ஆனால் பாரதி அவளை பிடிக்கவும் அவள் வியந்தாள்.
பாரதியோ அவசரமாக அவளை லிப்டில் இழுத்து விட்டான். உள்ளே இருவரும் இருக்க லிப்ட் மூடிக் கொண்டது. உடனே அதை ஸ்டாப் செய்து நிறுத்தியும் விட்டான். லிப்ட் கதவு மூடியதும் பாரதி சட்டென சக்தியை இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் இருந்த நடுக்கம் அவளை என்னமோ செய்தது
”பாரதி” என அழைக்க அவனின் உடல் குலுங்கியது அழுகிறான் என புரிந்துக் கொண்டவள்
Thank you.