எல்லோரும் பெரிய அஜித், விஜய், சூர்யான்னா? ஐ ரியலி அப்ரிஷியேட் சங்கவி... இப்படி தான் செய்யனும்...”
“சாரி... நான் என்ன செய்யங்க சஹானா... இது போல எல்லாம் எனக்கு சொல்லித் தர அப்போ யாரும் இல்லையே’ என்றான் தீபக் மெல்லிய குரலில்!
அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்கள் அமைதியில் கழிந்தது...
சாதனா கிஷோரை பார்த்து கண்களால் பேசினாள்... சஹானாவை காண்பித்து அவள் சொன்னதை புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக லேசாக தலை அசைத்த கிஷோர்,
“சரி, நவ் இட்ஸ் டைம் டு கூல் டவுன்... சில்லுன்னு இன்னுமொரு ஜூஸ் குடிப்போம்... நான் வாங்கிட்டு வரேன்...” என்றபடி எழுந்தான்.
“நானும் வரேன்...” என்று அவனுடன் செல்ல எழுந்தான் தீபக்.
“இல்லை தீபக், உங்களுக்கு தான் முதலில் நான் சில்லுனு ஏதாவது தரனும், நீங்க இருங்க நான் வாங்கிட்டு வர்றேன்...” என்று அவனை தடுத்தான் கிஷோர்.
“நீங்களே எப்படி நாலு ஜூஸ் எடுத்துட்டு வர முடியும்? நானும் வரேன்...” என்றாள் சாதனா.
“நோ, மை லேடி! நீ ரெஸ்ட் எடு, உனக்காக இந்த வேலை எல்லாம் செய்ய தான் நான் இருக்கேன்...” என்றான் கிஷோர் நாடக பாணியில்.
சாதனா பொய்யாக கோபப்படுவதாக காட்டிக் கொண்டாள்... ஆனாலும் அவள் முகத்தில் மலர்ச்சியே இருந்தது...!
“அவங்க இரண்டு பேரும் வேண்டாம்... நான் உங்களுக்கு ஹெல்ப் செய்ய வரேன்....” என்று சொல்லிவிட்டு கிஷோருடன் நடந்தாள் சஹானா...
அவர்கள் இருவரும் சென்ற திசையை பார்த்தபடி ஒரு சில வினாடிகள் அமர்ந்திருந்தனர்
Ivanga rendu peroda fb is saddening...anyway Saha is out of it and waiting to see her in action to releive Deepak from Sanghavi
Look forward to read the next update.
Thank you.
Aana sahana um deepak um Epom mingle aaguvanga..
Sadhana nd kishore love cutely expressed.. 😘😘😘
Thanks for more pages..
Waiting for next episode...