(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

வாங்கணோம்னு இல்லை, அதை வாங்கி சில நல்ல காரியங்கள் செய்யனோம்னு நாங்க நினைச்சிருக்கோம். அதனாலதான் அதை விலைக்கு கேட்டேன், எப்படியும்  அம்மா அப்பாக்கு உங்க கல்யாணத்துக்கு பணம் வேணும், பிறகு அவங்க

பிற்காலத்தை பத்தி பார்க்கணும் அவங்க வாழ வேணாமா? இல்ல நீங்க கொண்டு போய் வச்சுப்பீங்களா?"

"ஏன்கா நீ வச்சுக்க மாட்டியா?"

"அதான் இங்க கொண்டு வந்து வச்சுருக்கேனே? அப்பாவுக்கு பொழுது போக ஏதாவது ஏற்பாடு செய்யனும் உங்களுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுல பேசனும் நிறைய வேலை இருக்கு...."

அவள் போன் ரிங் வந்தது அதை எடுத்து " சொல்லுங்க ஆன்டி, ஏதாவது முக்கியமான விஷயமா?"

"ஆமாம்மா, அந்த பையங்க வீட்ல பேசிட்டேம்மா, அவங்க நாளைக்கே பொண்ணு பார்க்க வரலாமான்னு கேட்டாங்க. என்ன சொல்ற?"

"ஆன்டி, என் தங்கைங்க வேலைக்கெல்லாம் போகல அதை சொல்லிட்டீங்களா?"

"சொல்லிட்டேம்மா, நான் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன், அவங்க உன்ன பத்தி கேட்டாங்க, நானும் உன்னோட சொந்த விஷயம் அதை பத்தியெல்லாம் அவங்க கேக்க கூடாதுன்னு சொல்லிட்டேன். அவங்களும் சரி எங்களுக்கெதுக்குன்னு சொல்லிட்டாங்க , நீ கவலப் படாதேம்மா."

"சரிங்க ஆன்டி, அம்மா அப்பாகிட்ட பேசிட்டு  உங்களுக்கு உடனே போன் பண்ணி சொல்லட்டுமா ஆன்டி?"

"சரிம்மா, போன் பண்ணி சொல்லு அதுக்கு பிறகு அவங்ககிட்ட பேசறேன்."

"சரிங்க ஆன்டி!"

போனை வைத்து விட்டு தன் அம்மா அப்பாவை பார்க்க சென்றாள்.

"அம்மா!" லக்ஷ்மி திரும்பி பார்த்து "என்ன தனம்?"

"நிக்கத் ஆன்டி போன் செய்ஞ்சாங்க, அவங்க அந்த பையன் வீட்டில பேசிட்டாங்களாம், அவங்க நாளைக்கே பெண் பார்க்க வரங்களாம், நீயும் அப்பாவும் என்ன சொல்றீங்க?"

"அதுக்குள்ளவா, எப்படிடி இவ்வளவு சீக்கிரம்?"

"ஏம்மா என்ன யோசிக்கற? ஆன்ட்டிகிட்ட கேட்ட நீ, அவங்க ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாங்க, அவங்க சொன்னதை செய்யறவங்கம்மா அதான் சொன்னபடி செய்ஞ்சுட்டாங்க!"

"அது சரி, என்னங்க நீங்க என்ன சொல்றீங்க நாளைக்கு வர சொல்லலாமா என்ன?" என்று தன் கணவனிடம் கேட்டார் லக்ஷ்மி.

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.