(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

இப்போதோ அவளை பார்த்தவுடன் அவளுடைய உதவி வேண்டுமென அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சாப்பாடு ரெடி, சாப்பிட்டு கிளம்பவும் நாங்க ரெடி. " அவள் அம்மா அவளிடம் கூறினார் .

"அம்மா, அப்பா உங்களோட கொஞ்சம் பேசனும். ஆண்ட்டி , அங்கிள், அஜய் நீங்கல்லாம் சாப்பிடுங்க கொஞ்சம் பேசிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கறேன்."

'சரிம்மா!" ஜாபர் தான் கூறினார்.

"என்ன விஷயம் நாங்க இல்லாம பேசப் போற?" என்று கேட்டாள் வள்ளி .

தனம் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு, "அம்மா அப்பா உள்ளே வாங்க!" ரூமுக்குள் போய்விட்டாள்.

வள்ளி தான் தங்கையிடம், "அப்படியென்ன ரகசியம் பேசப்போறா நாம இல்லாம, அதான் எல்லா ரகசியமும் வெட்ட வெளிச்சமாயிடுச்சே , இன்னும் என்ன பாக்கி இருக்காம்?"

"சும்மா இருடி அம்மா வந்தா எல்லா தெரிஞ்சுடும், சரி வா அவங்களுக்கு சாப்பாடு போடலாம். "

அம்மாவையும், அப்பாவையும் உள்ளே கூட்டிக் கொண்டு போனாள் "என்னம்மா ?" என்று கேட்டார் லக்ஷ்மி

"அம்மா நீங்க சென்னைக்கு வந்திருக்க போறீங்க, என் ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் செய்யணும் என்ன பிளான், ஏதாவது நகை பணம் ஏதாவது சேர்த்து வச்சிருக்கியா?"

"அதான் அன்னிக்கே சொன்னேனே ஒன்னும் சேர்க்கவில்லை, எங்களுக்கு வசதி ஒன்னுமில்லை, அதான் நீ உன் தங்கைகளுக்கு கல்யாணம் செய்ஞ்சு வச்சுடு."

"சரிம்மா, ஆனா அம்மா, எனக்கு இந்த வீட்டை என் பேர்ல எழுதி தரனும், இது வெறும் தங்கைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கறதுக்காக நான் கேக்கலம்மா, இதை உங்க பிற்கால சேஃப்பிட்டிக்காக அதை புரிஞ்சுக்கோங்க. நாளைக்கே கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்துல உடனே பங்கு கேட்டால், உன் பெண்களை பத்தி நான் சொல்லத்தேவையில்லை. நான் ரொம்ப அவங்களோட பழகல,  ஆனா உங்க ரெண்டு பேருக்கும் தெரியும், அவங்க கேட்ட பிறகு சண்டையா போட்டுண்டு இருக்க முடியும். அவங்களுக்கு வேண்டியத செய்ஞ்சுக்கலாம் இப்போ என் பேர்ல எழுதி கொடுத்துடுங்க எவ்வளோ மார்க்கெட் வால்யூவோ அதை கொடுத்துடறேன், அதுல அவங்க கல்யாண செலவு போக மீதியை உங்க பேர்ல பாங்க்ல போட்டுட்டு அதில் வர வட்டியை நீங்க வாழறதுக்கு வச்சுக்குங்க, இந்த வீடும் யார்கிட்டயும் போகாம என்கிட்ட இருக்கும், இது சரின்னா சென்னைக்கு போனவுடன் பணம் ஏற்பாடு பண்ணி உங்க அக்கவுண்ட் ஒன்னு புதுசா திறந்து அதில போட்டுடலாம் , இதை நீயும் அப்பாவும் முடிவு பண்ணி

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.