(Reading time: 20 - 39 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

******

 அடுத்த நாள் மாலை

 “பாலியல் குற்றவாளி சுட்டுக் கொலை!

 “கொலைகாரன் சுடப்பட்டான்

 “தப்பியோடிய கொலைகாரன் போலீஸார் சுட்டு மரணம்!

என்று விதவிதமான தலைப்புச் செய்தியுடன் மாலை நாளிதழ்கள் பரவலாக விற்பனையாகிக் கொண்டிருந்த நேரத்தில் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் முன் நின்றிருந்தார் தீனதயாள்.

 “வெல்டன் மிஸ்டர்.தீனதயாள்!...திட்டப்படி காரியத்தை நேர்த்தியா...பப்ளிக்கிற்கோ...பத்திரிக்கைகாரங்களுக்கோ...கொஞ்சமும் சந்தேகமே வராதபடி கச்சிதமா முடிச்சுட்டீங்க!...குட்...குட்!

 “தேங்க் யூ சார்!

 “இது சம்மந்தமா மீடியாக்காரங்களுக்கு எந்த பேட்டியும் நீங்க தனிப்பட்ட முறைல தர வேண்டாம்!...ஆஸ்க் தெம் டு கம் அண்ட் மீட் மீ!..ஓ.கே?”

 “ஓ.கே.சார்!

கமிஷனர் அறையை விட்டு வெளியேறி நேரே ரெஸ்ட் ரூமிற்குச் சென்று, தனிமையில் அமர்ந்தார் தீனதயாள். அவர் மனம் பின்னோக்கிச் சென்று அந்த நாளை எண்ணி உள்ளுக்குள் மௌனமாய்க் குமைந்தது.

 “என்ன மிஸ்டர் தீனதயாள் இங்க வந்து உட்கார்ந்திட்டிருக்கீங்க?...அங்க டிப்பார்ட்மெண்டே உங்களைப் புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளிட்டிருக்கு!

கேஷுவலாய்ப் பேசியபடியே தீனதயாளுவின் தோளைத் தொட்டுத் திருப்பிய சக அசிஸ்டெண்ட் கமிஷனர் முத்துக்குமார் அவரது விழியோரம் பூத்து நின்ற கண்ணீர் மொக்குகளைப் பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தார்.

மிஸ்டர் தீனதயாள்...ஆர் யூ ஆல்ரைட்?” சன்னமான குரலில் கேட்டார்.

விரலால் விழி நீரைச் சுண்டியெறிந்த தீனதயாள் “ஒண்ணுமில்லை மிஸ்டர் முத்துக்குமார்....கொஞ்சம் பழைய நினைவுகள்ல ஆழ்ந்துட்டேன்!கரகரத்த குரலில் சொன்னார்.

 “உங்க மகளைப் பத்தித்தானே?”

 “யெஸ்!..மூன்றரை வருஷமாச்சு அவ என்னை விட்டுப் போய்!...எங்க போனா?...எப்படி இருக்கா? எதுவுமே தெரியாது!...ஒரு வெறி பிடிச்ச நாயைச் சுட்டுக் கொன்னதையே தாங்க முடியாம என்னை விட்டு விலகிப் போனா...இப்ப ஒரு மனுஷனையே சுட்டுக் கொன்னிருக்கேன்...ஹூம்...இப்ப அவ இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பாள்?னு நெனச்சுப்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.