ஆரம்பிக்கலாம், நாளைக்கு உங்களுக்கு புது போஸ்டிங் ஆர்டர் வரும் மேடம்."
"தேங்க்ஸ் சார்! அப்போ நான் கிளம்பறேன் சார் நாளைக்கு பார்க்கலாம் "
அவள் வீட்டுக்கு கிளம்பி போனாள், அங்கே வாசலில் ஜாஃபர் அங்கிள் காரை பார்த்தாள், ஐயோ அங்கிள், ஆண்ட்டி வந்திருக்காங்க போல, ஏதாவது கேட்டா என்ன பண்றது? இந்த மாதிரி ஒரு தர்ம சங்கடத்தை எதிர்பார்க்கவேயில்லை. அதுவும் ஜாபர் அங்கிள், நிக்கத் ஆண்டியிடம் இப்படி நினைப்போம், என்று அவள் நினைக்கவேயில்லை.
அவள் கண் முன் மறுபடியும் அப்துல் வந்து நின்றான் .அவன் உயரம், அழகு என்று எல்லாமே அவளை கலங்கடித்தது .
எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, உள்ளே நுழைந்தாள்.
"அங்கிள், ஆண்ட்டி வாட் எ சர்ப்ரைஸ்?"
"எல்லாமே சர்ப்ரைஸ் தான் தனம்மா, என்ன இன்னிக்கு ஆபிசுலேர்ந்து சீக்கிரமே வந்துட்ட?"
"ஆமாம் ஆண்ட்டி கொஞ்சம் தலைவலியா இருந்தது, அதான் வீட்லேர்ந்து வேலை பண்ணலாம்னு வந்தேன் ஆண்ட்டி, ஹ்ம்ம் விஷயம் இல்லாம அங்கிள் தன் வேலையெல்லாம் விட்டுட்டு வரமாட்டார், என்ன விஷயம் அங்கிள்? ஏதாவது ரொம்ப முக்கியமா?"
"ஆமாம்மா ஒரு விஷயமாத்தான் வந்தேன், அஜயை பார்க்க வந்தேன், உன்னிடமும்தான் பேசனும்!"
"அப்படியா அங்கிள், என்ன விஷயம் அங்கிள்?"
"அஜய்க்கு ஒரு சினிமா சான்ஸ் வந்திருக்கும்மா, அதான் அவன்கிட்ட சொல்லிட்டு , உன்கிட்டயும் கேட்கலாம்னு இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் தான் முடிவு சொல்லனும்!"
"நான் சொல்றதுக்கு என்ன இருக்கு அங்கிள், அவன் தானே வளர்ந்தவன், அவனை வளர்த்து விட்டவர் நீங்க, அதனால நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு பண்ணாலும் சரி, அது மட்டுமில்லாம அவன் தானே முடிவு எடுக்கற அளவு பெரியவனாயிட்டான், நீயே முடிவு பண்ணு அஜய்."
"ம்ம், நீ ஒரு அம்மாவாவும் அவனுடைய தோழியாவும் இருக்க, சந்தோஷமாயிருக்கு தனம், நானும் உனக்கு ஒரு தோழின்னுதான், நான் நினைக்கறேன். நீ என்ன நினைக்கற என்ன பத்தி?"
'ஆஹா, ஆண்ட்டி ஏதோ அடி போடறாங்களே' என்று நினைத்தாள்.
"என்ன ஆண்ட்டி, அப்படி கேக்கறீங்க உங்கள என் அம்மாவாத்தானே நான் நினைச்சிண்டிருக்கேன்!"
"அப்படியா, ரொம்ப சந்தோஷம்மா எனக்கு, அப்போ அந்த உரிமைல உன்கிட்ட எதுவேனா பேசலாமா?"