(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அவளை கட்டிக் கொண்டு கேட்டான்.

"வாப்பா நீங்க அழகாயிருக்கீங்க!" அப்துலுக்கு முகம் சிவந்தது, தனத்தை நிமிர்ந்து பார்த்தான், புருவங்களை ஏற்றி, நீ சொல்லவேயில்லையே, என் மக சொல்றா பார் நீ என்ன சொல்ற? என்று பார்வையால் கேட்கையில் அவளுக்கும் வெட்கத்தில் முகம் சிவந்தது, அவன், அவளின் முகச் சிவப்பில் தன்னை இழந்தாலும் தன்னை சுதாரித்துக் கொண்டு தன் மகளை கையில் தூக்கிக் கொண்டான், ஒரு பக்கம் அவன் தனம் பக்கத்தில் நின்றுக் கொண்டான், இம்ரான் ஜாபர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். அவனையும் தன் அருகில் அழைத்துக் கொண்டான், "இம்ரான், சாய்ரா, அம்மீ ஓகேவா?" என்று புன்னகையோடு கேட்டான், இம்ரானுக்கு தன் வாப்பாவின் சிரிப்பு புதிதாக இருந்தது, தன் வாப்பா அவர்களோடு விளையாடும்போது அவரை ஏதாவது சொல்லி அங்கிருந்து துரத்தி விடுவாள் அவன் அம்மீ, அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படித்தான், பாவம் வாப்பா சிரித்தே பார்த்ததில்லை, இப்போதோ அவர் சிரிப்பில், அந்த சிறுவன் மயங்கினான்.

"வாப்பா' என்று அகமகிழ்ந்து அவனிடம் ஒட்டினான் சிறுவன், அதை பார்த்த ஜாஃபருக்கும், நிக்கத்துக்கும் கண்ணில் கண்ணீர் உதிர்ந்தது, ஒரு தப்பை சரி செய்ய போகிற ஒரு திருப்தி. "சரிம்மா தனம் இங்க வாங்க "என்று அவளை அழைத்து விட்டு, "தனம்மா, நீங்க தான் சொல்லணும், உங்க முறைப்படி தாலி கட்ட என்ன செய்யணும், வெறும் தாலிதாம்மா கட்ட போறான், அதுக்கு என்ன செய்யணுமோ நீங்களே எல்லாம் செய்துடுங்க, உங்களுக்கே தெரியும் நாங்க வேற மதத்தவங்க ஒன்னும் தெரியாது."

"சரிங்க நானே தாலிய சாமி கிட்ட வச்சு கொடுக்கறேன், உங்களுக்கு ஒன்னும் இல்லையே?"

"பாட்டிம்மா (லட்சுமி) தாலிய நான் எடுத்துக் கொடுக்கறேன் பாட்டிம்மா, நீங்க என்ன சொல்றீங்க?"  அஜய் கேட்டவுடன் எல்லாருக்குமே ஆச்சர்யம் .

"கண்டிப்பா கண்ணா, நீயே கொடேன்!"

"என்ன பாட்டிம்மா (நிக்கத்தை பார்த்து) கேட்டான், உங்களுக்கு ஒன்னும் பிராப்லம் இல்லையே, நான் தாலிய கொடுக்கலாம்ல "

"ஒன்னும் பிராப்லம் இல்லடா ராஜா, நீயே கொடு"

"இம்ரான், சாய்ரா இங்க வாங்க! "  அவர்களையும் தன்னோடு அனைத்து நிற்க வைத்துக் கொண்டான்.

லட்சுமி கடவுளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து, கடவுளை வேண்டிக் கொண்டு அந்த தாலியை அஜயை எடுத்துக் கொள்ள கூறினார்.

அவனும் எடுத்து, இம்ரானையும் சாய்ராவையும் கூடவே பிடித்துக் கொள்ள கூறினான் ,மூன்று பேரும் சேர்ந்து அப்துலிடம் கொடுத்தனர். அப்துல் மூவருக்கும் முத்தம் கொடுத்து விட்டு

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.