ஸ்டீபனோடு அவன் கிளம்பி போனான்
"சந்தர், மிஸ்டர் அப்துல்ன்னு ஒருத்தர் வருவார், உங்க ப்ராஜக்டுக்கு அவர் உதவுவார்" போனை வைத்து விட்டு, "வெரி குட் தனம், இவர் ரொம்ப டேலண்ட்டடா உங்கள மாதிரியே இருப்பார்னு நினைக்கறேன்."
"ஆமாம் சார், என்னோட ஸ்கூல் மேட், அவனும் ஸ்மார்ட் தான் சார், ஆல்வேஸ் பர்ஸ்ட் இன் தி க்ளாஸ்."
"குட், சரி தனம் மேடம், ஏதாவது டவுட் இருக்கா?"
'இப்போ வரை இல்ல சார், நீங்க இப்போ கிளம்பறீங்களா?"
'ஆமாம் தனம் மேடம், நான் போய் சில அரேஞ்மென்ட் பண்ணனும், அதான்."
"பரவாயில்ல சார், நீங்க கிளம்புங்க நான் பைல்ஸ் எல்லாம் பார்க்கறேன், ஏதாவது டவுட் இருந்தா நான் உங்களுக்கு கால் பண்ணி கேட்கறேன்."
"ஓ குட் தனம், அப்போ நான் கிளம்பவா?"
"ஓகே சார், குட் லக் சார்!"
"தேங்க்ஸ், தனம் மேடம்!"
"சார் இப்பவாவது என்ன உங்க தங்கையா நினச்சு தனம்னே சொல்லுங்க சார். "
"சரி தனம், நீங்க என் தங்கைதான் என் வீட்டுக்கு வாம்மா நாங்க ஊருக்கு கிளம்பரத்துக்கு முன்."
"சார், உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்!"
"சொல்லும்மா!"
"சார், எனக்கு நேத்து வீட்டோட கல்யாணம் ஆயிடுச்சு, நானே எதிர் பார்க்காதது."
"வாட்? அது எப்படி?"
"உங்களுக்கு என் மகன் அஜய் பற்றி தெரியும் இல்ல?"
'ஆமாம்! "
"அவங்க அப்பாதான், நேத்து காலைலதான் அவரை ரெக்கார்டிங் தியேட்டர்ல மீட் பண்ணேன், என் மகன் எப்படியோ என்னை கன்வின்ஸ் பண்ணி நேத்தே கல்யாணம் செய்யணும்னு சொன்னான், என் மகனுக்காகவும் கல்யாணம் செய்துண்டேன்"
"மகனுக்காகவும்னா?"
"அது எனக்காகவும், அவருக்காகவும்தான், அவர் பாவம் தான் எனக்கு துரோகம் செய்துட்டதா பீல் பண்ணிட்டிருக்கார்."
"ஐ அம் ரியல்லி ஹாப்பி பார் யு, தனம்"
'தேங்க்ஸ் சார், இந்த அப்துல்தான் என்னோட ஹஸ்பண்ட் சார்! "