போன்ல சொன்னாங்க, நான் எப்படியும் அவர் ரெசுமி கொண்டு வந்திருந்தேன், சுமதியும் கேட்டவுடனே நான் அந்த கண்டிடேட்டை நேராவே வரச் சொல்லிட்டேன். "
"வெரி குட், தனம் மேடம் எப்படியிருந்தாலும் நீங்க தான் டீம் மானேஜர் உங்களுக்கு வேண்டிய கண்டிடேட்டா இருந்தா நல்லது தான், சரி இன்னும் உங்களுக்கு......"
அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது "எஸ் கம் இன்!" என்றாள், தனம்.
அப்துல் தான் உள்ளே வந்தது.
"வாங்க அப்துல், சார் இவர் தான் அந்த கண்டிடேட் மிஸ்டர் அப்துல் இப்ராஹிம் ஜாஃபர் "
"ஹலோ மிஸ்டர் அப்துல், ஐ அம் முரளி!"
"ஹலோ சார் ஹௌ ஆர் யு?"
"ஐ அம் வெரி வெல், தான்க் யு "
"குட், எச் ஆர் சுமதி என்ன சொன்னாங்க?"
"இதோ ஆர்டர் கொடுத்துட்டாங்க, சார் "
"ஆது, அப்துல், இவர் இங்க மானேஜர், இப்போ பெங்களூரு ட்ரான்பார் ஆயிடுத்து, அந்த இடத்துல தான் என்ன போட்டிருக்காங்க, சோ யு ஆர் கோயிங் டு ஒர்க் அண்டர் மீ, இவர் எனக்கு அண்ணன் மாதிரி, எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கார், ஐ வில் மிஸ் யு சார்!"
"மி டூ தனம் மேடம் உங்கள மாதிரி ஒரு டேலன்டட் ஸ்டாப் பார்க்கறது கஷ்டம்."
"சோ கங்கிராசுலேக்ஷன்ஸ் டு யு அப்துல்!"
"தேங்க்ஸ் சார்! "
"கங்கிராட்ஸ் ஆதூ! " என்றாள் மெதுவாக
"தேங்க்ஸ்! " என்றான் அதே குரலில்.
"சோ என்னிக்கு ஜாயின் பண்ணனும் அப்துல்?"
"சார் அவங்க உடனே நாளைக்கே கூட ஜாயின் பண்ணிக்க சொன்னாங்க நான் இன்னிக்கே பன்றேன்னு சொன்னேன். அவங்களுக்கும் சந்தோஷம்." தனத்தை பார்த்தான் அர்த்தத்தோடு, அவளும் புரிந்துக் கொண்டாள். அவளோடு கூட இருப்பதற்காகவே அவன் உடனடியாக ஜாயின் செய்துவிட்டானென்று.
அவளும் மென்னகை புரிந்தாள்.
"ஓகே அப்துல், நீங்க இருங்க! "என்று பெல் அடித்தார் மானேஜர்
பியூன் உள்ளே வரவும் "ஸ்டீபன், இவரை நம்ம சந்தரிடம் கூட்டிக் கொண்டு போங்க நான் மிச்சத அவரிடம் போன்ல சொல்றேன். "
அப்துல் எழுந்து கொண்டு "ஓகே சார், ஓகே மேடம், நான் அப்பறம் உங்கள பார்க்கறேன்"