(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"அப்படி என்ன வயசாச்சு தனம் நமக்கு, முப்பத்தியாறு வயசு ஒரு வயசா? இந்த வயசுல குழந்தையை பெத்துக்காம ஒரு பத்து வருஷம் கழிச்சு நமக்கு தோணின அப்ப சின்ன வயசாயிருக்குமா? அதனால முடிவு பண்ணா அத செய்ஞ்சுடணும். நீ முடிவு பண்ணு, உண்மையாவே உன் மகனுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசையிருந்தா நீயே முடிவு பண்ணு, நீ எது சொன்னாலும் எனக்கு ஓகேதான். " சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் போய்விட்டான்.

நிக்கத் போன் ரிங் போய் கொண்டே இருந்தது, வீட்டுக்கு வந்தவுடன் குழந்தைகளை அவர்கள் ரூமில் குளித்து டிரஸ் மாற்றிக் கொண்டு வருமாறு கூறிவிட்டு தன் ரூமில் டிரஸ் மாற்றிக் கொள்ள சென்றார் நிக்கத், போன் ரிங்க வருவதை கேட்டு அதை எடுத்து "ஹலோ!"

"ஹலோ நான் ஆமீராவோட அண்ணி பேசறேன்."

"ஹா, சொல்லு ஆஸ்மா எப்படியிருக்க?"

"நல்லாயிருக்கன் அத்த, என்னோட சித்தி மக இருக்கா, நம்ம அப்துலுக்கு பார்க்கலாம்னு முடிவு செய்ஞ்சிருக்கோம் நாங்கல்லாம், அதான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரோம் பேசி முடிச்சுடலாம், நம்ம இம்ரானுக்கும், சாய்ராவுக்கும் அம்மீ வேணுமில்ல அவங்கள கவனிக்க இவள் நல்ல பெண்ணாயிருப்பா அது மட்டுமில்ல, உங்க அப்துலுக்கும் சின்ன வயசில்லயா? எவ்வளவு காலம் தான் தனியா வாழ முடியும், அதான் நாளைக்கே புறப்பட்டு வரோம் அத்த அத சொல்லத்தான் கூட்டேன் வச்சுடவா?"

பட்டென்று வைத்து விட்டாள். நிக்கத்துக்கு கோவம், அது என்ன நம்ம என்ன சொல்றோம்னே கேக்காம அவங்களே முடிவு பண்ணிட்டாங்க? இது என்ன  புதுசா இருக்கு இவங்க விளையாட்டு, என்ன ஒரு மரியாதை கூட இல்லாம…"

"ஜாஃபர்...."

"ஹா, என்ன நிக்கத் சொல்லும்மா?"

"என்ன விஷயம் ஜாஃபர், இந்த ஆமீராவோட அண்ணி ஆஸ்மா ஃபோன் பண்ணியிருந்தா ஜாஃபர், அவங்க சித்தி பொண்ணு இருக்காளாம் , நம்ம அபூக்கு பார்க்கலாம்னு நாளைக்கே கிளம்பி வரங்களாம் அது பத்தி பேச, அதுவும் என் பதிலுக்கு காத்திருக்காம அவங்களே பேசி நான் வச்சிட்டுட்டான்னு வச்சிட்டா, இப்ப என்ன செய்ய?"

"அதே மாதிரியே நீ போன் செய்ஞ்சு வரவேணாம்னு சொல்லு, அபூக்கு நாங்களே பொண்ணு பார்த்துட்டோம்னு சொல்லு, அதுக்கு மேல அவங்க பொண்ணு பாக்கறேன்னு தொல்லை செய்ய மாட்டாங்க இல்லியா?"

"நானா, நீங்க செய்யுங்க அவங்க அண்ணனை கூட்டு வரவேணாம்னு சொல்லுங்க.'

"இல்ல நிக்கத் எனக்கு அவங்க கூட பேச இஷ்டமேயில்லடா, நீயே சொல்லிட்டேன்."

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.