(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"ஐயோ ஆண்ட்டி என்ன இப்படி கேக்கறீங்க, உங்களுக்கு இல்லாத உரிமையா? என் உயிரையே இந்த மாதிரி ஆல மரமா வளர்த்திருக்கீங்க, இதுக்கு என்ன வேணா பண்ணலாம் ஆண்ட்டி, சொல்லுங்க நான் என்ன செய்யனும்?"

"நீ வாக்கு கொடுத்தா அதுவே போதும்மா, நீ நிக்கா பண்ணிக்கணும், அது என் ஆச மட்டுமில்ல அஜய்தும்தான், உன் மகனோட ஆசைய நீ தீர்த்து வைக்க மாட்டியா?"

"என்ன ஆசைய வேணா தீர்த்து வைக்கலாம் ஆண்ட்டி, ஆனா கல்யாணம்ன்றது இனி பேச வேணாமே, ப்ளீஸ்! "

"அப்போ நீ கொடுத்த வாக்கு என்னவாச்சு? அவ்வளவுதானா?"

"இல்ல ஆண்ட்டி எதுவேனா கேளுங்க நா பண்றேன். ஆனா இந்த கல்யாணம் பேச்சு மட்டும் வேணாமே!"

"உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா, நான் சொல்ற மாதிரி, நிக்கா செய்துக்கம்மா தனம், சொல்லு நிக்கா செய்துப்பியா?"

"என்ன ஆண்ட்டி திடீர்னு கல்யாணம் கல்யாணம்னு என்ன போர்ஸ் பண்றீங்க?" அஜயையும், ஜாஃபரையும் பார்த்தாள்.

அஜய் அவளை பார்த்து புன்னைகைத்தான்.

'அவளுக்கு தெரியும் அப்துலை அவள் ஜாஃபர் ஆபிசில் தானே இன்னிக்கு காலையில பார்த்தாள், அதுதான் இதுக்கெல்லாம் காரணமா?'

"அஜய், என்ன கண்ணா திடீர்னு என் கல்யாணத்த பத்தி பேசற? நீ இவ்வளவு பெரிய பையன் எனக்கு இருக்க இப்ப போய் கல்யாணத்த பத்தி பேசறியேப்பா?"

"உங்களுக்கு நான் இவ்வளவு பெரிய பையன்னா, அப்பாக்கும் நான் இவ்வளவு பெரிய பையன்தானேம்மா, உன்ன யாரையோ கல்யாணம் பண்ணிக்க சொல்லல, அப்பாவத் தானே கல்யாணம் பண்ணிக்க சொல்றோம்?"

அவள் முகம் சிவந்தது, அது வெட்கமா, கோவமா என்று தெரியவில்லை யாருக்கும், அவள் நிக்கத்தை திரும்பி பார்த்தாள், அவர் ஆம் என்பது போல் தலையை ஆட்டினார் "இல்ல ஆண்ட்டி, ப்ளீஸ் இதுக்கு மேல என்கிட்டே கேக்காதீங்க!"

"இல்ல அம்மா நான் கேட்பேன், என் அம்மா இப்படியே காலம் கழிக்க விடமாட்டேன், நீ அப்பாவ கல்யாணம் பண்ணிக்கோமா, இது உனக்காக மட்டுமில்ல எனக்காகவும்தான், எனக்கு நம்ம, குடும்பம் இப்போவாவது சேர்ந்து இருக்கனும்,

நாம எல்லாம் சேர்ந்து வாழனும்மா. அப்பாவும் நம்மோட வந்து இருக்கனும்மா, இது உனக்கு நல்லாவே தெரியும் நான் எவ்வளவு ஏங்கியிருக்கேன்னு ப்ளீஸ்மா, சே எஸ் டு திஸ்?"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.