(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"என்ன ஆதூ, அவன் பிரென்ட் வீட்டுக்கு போலாமா?"

"என் தனம்மா, நீ அவனோட அம்மா நீ என்ன முடிவு பண்ணாலும் சரி, அவனுக்கு மட்டுமில்ல இனி எனக்காகவும் நீதான் எல்லாமே டிசைட் பண்ணனும்."

"யப்பா இந்த ரெஸ்பான்சிபிலிட்டில்லாம் எனக்கு வேணாம்பா."

"ஏண்டா அப்படி விலகிப் போற?"

"ஹ்க்க்ம்,' என்று தன் மகன் இருப்பதை கண் ஜாடையால் தெரிவித்தாள்

"அவர்கள் வீட்டிற்கு சென்றதும் "டாட், சாய்ராவையும் இம்ரானையும் வீக் எண்ட்ல இங்க கூட்டிட்டு வாங்க, அப்படியே, அம்மா நான் ஒரு ரிக்வெஸ்ட்  வைக்கலாமா?"

"என்னப்பா?"

"ஒண்ணுமில்ல, சமயம் வரும்போது கேக்கறேன், இப்ப நான் கிளம்பறேன்."

"சரி ராஜா, எனக்கு தெரியும் உனக்கு சாய்ராவை ரொம்ப பிடிச்சிருக்கு, இல்ல?"

" ஆமாம் டாட், எனக்கு தங்கச்சிண்ணா ரொம்ப இஷ்டம் டாட்!" என்று தன் அம்மாவை பார்த்தான், அவளுக்கு அவனுடைய பேச்சில் உள்ள அர்த்தம் புரிந்தது, முகம் வெட்கத்தில் சிவந்தது, அவனை பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள்.

"சரி டாட் நான் போயிட்டு வந்துடறேன், என்னடா உன் அம்மாக்கு வெட்கம் போல?"

"டாட், நான் சும்மா சொல்லல, சீரியஸா சொல்றேன் எனக்கு தங்க பாப்பான்னா ரொம்ப பிடிக்கும்."

"சரி பிரென்ட் எனக்கு புரிஞ்சுது, நீங்க ரொம்ப பெரிய ஆளுதான் பிரென்ட் அத புரிஞ்சுக்கிட்டேன், உங்க உத்தரவை நிறைவேத்த ட்ரை பண்றேன் பிரென்ட்!"

"டாட் இது என்ன பிரென்ட் பிரெண்டுன்னு சொல்றீங்க?'

"ஹ்ம்ம் நீ பெரிய ஆளாயிட்ட இல்லியா? அதான் தோளுக்கு மிஞ்சினா தோழன்ன்னு சொல்லுவாங்க, தோழன்னா பிரெண்டுதானே, அதான் பிரெண்டுன்னு சொன்னேன்."

அவன் சிரித்துக் கொண்டே, "நான் கிளம்பறேன் டாட், நீங்க இங்க இருக்குற தைரியத்துல தான் நான் போறேன், எங்கம்மாவை பத்திரமா பார்த்துக்குங்க."

"இத பாருடா, அவ என் மனைவி அவளை நான் ரொம்ப பத்திரமா பார்த்துப்பேன் சரியா? நீ போய் என்ஜாய் பண்ணிட்டுவா!"

"சரி டாட், மாம்!" என்று குரல் கொடுத்தான்.

அவள் வெளியே வந்தாள், "மாம் நான் கிளம்பறேன்."

"சரி கண்ணா, ஐ வில் மிஸ் யு கண்ணா!" என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவனும், "ஐ வில் மிஸ் யு டூ அம்மா!" என்றான் .

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.