(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அவன் அப்பாவையும் அணைத்துக் கொண்டு "பை டாட்!"

'பை சன்!"

அவன் கிளம்பிவிட்டான்.

கதவை போட்டுவிட்டு அப்துல் ரூமுக்குள் போனான், தனம் குளித்து டிரெஸ் மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள், அங்கே அப்துல் உட்கார்ந்திருந்தான் " ஆது, நீ போய் டிரெஸ் மாத்திண்டு இங்கே இந்த ரூமில் படுத்துக்கோ, நான் இன்னொரு ரூமில் படுத்துக்கறேன்."

"ஏய் நீ என் மனைவிதான?"

"ஹ்ம்ம், இதுல என்ன சந்தேகம்?"

"பிறகு ஏன் பொண்டாட்டி நான் தனியா நீ தனியா படுக்கணும்?"

"சே என்ன பேசற ஆதூ?"

'ஆமாம்டா, புருஞ்சுக்கோ நாம தனி தனியா படுக்கக் கூடாது, இது உன் மகனோட ஆர்டர் தெரியுமா?"

"என்னது, மகனோட ஆர்டரா?"

"ஆமாம்டா அவன் என்கிட்டே பாவம் கண்ல கண்ணீரோட எனக்கு ஒரு தங்கச்சி வேணும்னு சொல்லிட்டு போயிருக்கான் தனம்."

'என்னது? வெக்கமாயில்ல ஆதூ, மகன் சொன்னான்னு சொல்ற?அதுவும் வளர்ந்து இன்னும் ஐந்தாறு வருஷத்திலே அவனுக்கே கல்யாணம் செய்யற வயசுல மகன வச்சுண்டு உனக்கு இன்னொரு குழந்தை வேணுமா?"

'ஹேய் நான் சொல்லல, அவன் சொன்னான், என்ன ஏன் காட்டு காட்டற?"

 

"சரிடா, என்ன சொல்ல வரேன்னு புரியுது இல்ல, நமக்கு ஏற்கனவே மூணு பசங்க இருக்காங்க நம்ம நாட்ல ஏற்கனவே ஓவர் பாபுலேஷன் இருக்கு , இதுக்கு மேல நாமளும் இன்னும் அதிகமாக்க வேண்டாம்."

"இல்ல தனம்,எனக்கு நம்ம அஜயின் ஆசையை பூர்த்தி செய்யறதுதான் முத வேலை. இது வரைக்கும் அவனுக்குன்னு ஒன்னும்  கேட்கல, அவன் இப்போ ஒன்னு கேட்டிருக்கான் அத நாம செய்யறோம், அவனுக்கு ஒரு தங்கச்சிய பெத்து கொடுக்கற நீ. "

"ஏய் என்ன சொல்ற நீ, உண்மையாவே அவன் சொன்னானா?"

"ஆமாம் தனம் உன் மகன்தான் கேட்டான். அவன் ரொம்ப ஆசையோடும், பீலிங்கோடும் கேட்டான், அத எப்படி மறுக்க முடியும் சொல்லு பார்க்கலாம்!"

"சும்மா இரு ஆதூ, இந்த வயசுக்கு மேல நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசரியா ஆதூ?"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.