(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அஜயும் அப்துல் கிளம்பினார்கள், சாய்ராவை கொஞ்சி விட்டு அப்துல் கிளம்பினான்.

"அஜய் இங்க வரேன்னு சொல்லிட்டு போயிருக்கலாமில்ல?"

"இல்ல டாட், நானே திடீர்னு தான் டிசைட் பண்ணேன், எனி ப்ராப்லம்பா ?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மாத்தான் கேட்டேன். நீ வீட்டுக்குத்தான் போற?"

"இல்ல டாட், நான் இப்படியே காலேஜ் போறேன், ரொம்ப டைம் ஆயிடுத்து நான் கிளம்பறேன்" என்று கூறி அப்பாவை அணைத்துவிட்டு கிளம்பினான்.

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜாஃபருக்கும், நிக்கத்துக்கும், கண்ணில் நீர் துளிர்த்தது. "இதெல்லாம் கனவு போல இருக்கு ஜாஃபர்."

"எனக்கும் அதேதான் தோணியது நிக்காத், என்ன அருமையான பையன்  நம்ம அஜய்" என்று நிக்கத்திடம் கூறிக் கொண்டிருந்தபோது,

"ஆமா தாத்தா... எனக்கு கூட அஜய் பையாவை ரொம்ப பிடிச்சிருக்கு," என்று ஒத்து ஊதியது சாய்ரா.

"என் சாய்ராக்கும் அஜய் பையாவை பிடிச்சிருக்கா? எல்லாருக்கும் அஜய்ய ரொம்ப பிடிக்கும் அவ்வளவு நல்லவன் அஜய்! " என்று நிக்கத்தும் கூறினார். 

"சாய்ரா, நீ போய் விளையாடிக்கோ செல்லம்! " என்று நிக்கத் கூறியதும், ஓடி போனது சாய்ரா

"எனக்கு பயமாயிருக்கு ஜாஃபர், இதுக்கு பிறகு என்ன என்ன வில்லங்கம் வர போறதோ தெரியலையே?" என்று நிக்கத் வருத்தப் பட்டார்.

"பொறுத்திருந்துதான் பாக்கணும் நிக்கத், எனக்கும் ஏதோ  நடக்கப்போகுதுன்னு உள்ளுணர்வு சொல்றது, பொறுத்து பார்ப்போம். "

"பொறுத்துப் பார்ப்போம்னு சொல்லி, பிறகு எல்லாம் கை மீறி போயிடுத்துன்னா என்ன செய்யறது?"

"எனக்கும் ஒன்னும் புரியலையே, என்னதுன்னு தெரிஞ்சாத்தானே ஏதாவது ஸ்டெப் எடுக்க முடியும்."

"அதுவும் சரிதான், ஏன் நாம போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்பளைண்ட் கொடுத்தா என்ன?"

'எதுவும் உறுதியா தெரியாம எந்த கம்பளைண்ட்டும் கொடுக்கக் கூடாது நிக்கத்."

"அதுவும் சரிதான், வேறென்ன செய்யறது, அல்லாத்தான் நம்ம குழந்தைகளை காப்பாத்தணும்.... ஹே அல்லா, என் குழந்தைகளை நல்லா வை, நீ அவங்க கூட எப்பவும் இருந்து அவங்கள காப்பாத்து." என்று வேண்டிக் கொண்டார் நிக்கத்.

ஜாஃபருக்கும் மனது கலங்கியது. அவருக்குத் தெரியும் ஆமிராவோட அண்ணன் குடும்பம், எதையும் யோசித்து செயல் படக் கூடியவர்கள் கிடையாது. அவர்களுக்கு தோணியதை உடனே

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.