(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

இருக்கு சொல்லு?"

"குட் நியூஸா ?, என்ன குட் நியூஸ் என்று ஒரு சுற்று எல்லோரையும் பார்த்துவிட்டு , என்ன குட் நியூஸ் ஆதூ?" என்று அப்துலை பார்த்து கேட்டாள், அவன் தன் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவளை பார்த்து சிரித்துக் கொண்டே, " குட் நியூஸ்லாம் லேடிஸ்த்தான் சொல்லணும், நீ ஏதாவது என் கிட்ட சொல்லணும்னு இருந்தியான்னா?"

"அஜய், நீ என்ன சொல்ல வந்த?ஏன் உங்க அப்பா என்னென்னவோ உளறாரு?"

"அதுவும் கரெக்ட்தான், ஏம்பா உளறீங்க? அம்மா அது வந்து......" என்று பேச்சை மாத்தினான் அஜய்.

"அம்மா, பாட்டிம்மாவையும், மாஸ்டரையும் பார்த்தியா, எவ்ளோ சோகமே உருவா இருக்காங்க பார், நல்லதா ஏதாவது பேசி அவங்க முகத்துல சந்தோஷத்தை வர வழி பார்க்கலாம்?"

"ஆன்டி, அங்கிள் " என்று அவர்களிடம் பேச முற்பட்டபோது தான் கவனித்தாள் நிக்கத்தின் கண்கள் குளமாக இருந்தது.

" என்ன ஆன்டி இது, சீக்கிரமே எனக்கு,சரியாயிடும்  நீங்க கவலப் படாதீங்க."

அவரும் சிரித்துக் கொண்டே " இதெல்லாம் நான் உனக்கு சொல்லவேண்டியது நீ எனக்கு சொல்றியா?" என்று கேட்டார்.

"தங்கமே நீ சீக்கிரமே சரியாயிடுவ, உன்னோட நல்ல குணத்துக்கு அல்லாஹ் ஒரு தீங்கும் உன்ன அண்ட விடமாட்டரும்மா தனம். "

அவள் தலையில் கை வைத்து தடவிக் கொடுத்தார் நிக்கத்.

அவள் கண்ணிலிருந்து நீர் சுரந்தது, ஒரு புறம் அப்துலும் இன்னொரு புறம் அஜயும் அவளுக்கு ஆதரவாக ஒருவர் தலையிலும் மற்றொருவர் கையையும் தடவிக் கொடுத்தனர். "மாம், ஒன்னும் ப்ராபளமில்ல, கவலப் படாத."

"எப்படி அஜய் கவலப் படாம இருக்க முடியும், இப்போ தோத்து போயிடுத்துன்னு இன்னொரு முறை டிரை பண்ணுவாங்க, யாருக்குத் தெரியும் அடுத்த முறை அவங்க குறி சரியாயிடுத்துன்னா?"

"மாம், அதுக்குள்ளே போலீஸ் கண்டு புடிச்சுடுவாங்க, இத செய்தது யாருன்னு, நீ கவலையே படாத, உனக்கு எதுவும் ஆக நானும் மாஸ்டரும் விட மாட்டோம்!" என்று கூறி ஜாஃபரை பார்த்தான்.

"ஆமாம் தனம்மா, நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன்."

"எப்படி, யாருன்னு உங்களுக்குத் தெரியும் அங்கிள்? முகம் தெரியாத யாரோ பன்றாங்க, ஒரு வேளை, யாரையோ குறி வச்சு தப்பா என் மேல எறிஞ்சுட்டாங்களோ?"

"எதுவாயிருந்தா என்ன தனம்மா போலீஸ்தான் கண்டுபுடிச்சுடுவாங்க இல்ல, அப்ப யாரு

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.