என்னன்னு தெரிஞ்சுடும். இப்ப கவலப் படாம, உன் உடம்ப கவனிச்சுக்கம்மா, " என்றார் நிக்கத்.
"ஆமாம்மா, பாட்டிம்மா சொல்றதுதான் சரி, இப்போதைக்கு கவலையை விட்டு உடம்ப நல்லா கவனிச்சுக்க."
அது எப்படி முடியும் அஜய், அவளுக்கு யாருமே எதிரி இருக்க முடியாது, இல்லவும் இல்ல, அப்படித்தானே தனம்?" என்று அவளிடம் கேள்வி கேட்டு விட்டு "அப்படியிருக்கும்போது, யாரந்த புது எதிரி?"
"டாட், இதெல்லாம் நாம அப்புறமா பேசிக்கலாம், இப்போ அம்மாக்கு ரெஸ்ட் வேணும் அதுமட்டுமில்ல, அம்மா குட் நியூஸ் மறந்து போச்சா?" என்று அஜய் தனத்திடம் கேட்டு கண்ணை சிமிட்டினான்.
"ஆமாம் நீயும் குட் நியூஸ், குட் நியூஸ்ன்னு சொல்லிண்டே இருக்க, அப்படி என்ன குட் நியூஸ் சொல்லு அஜய்?"
தொடரும்...
Next episode will be published on 10th May. This series is updated weekly on Mondays.