தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 28 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
பாண்டிச்சேரியை அடைந்து, ஒரு யூத் ஹாஸ்டலில் குளித்து உடைமாற்றி, ஆசிரமத்திற்கு சென்றனர். அமைதியான அந்த இடம், உண்மையில் மனத்தைக் குளிர வைத்தது போலத் தான் இருந்தது ரம்யாவுக்கும். அங்கே சென்று வந்ததும் இருவரின் மனதிலும் ஒரு தெளிவு, திருமணம் பற்றி பேசலாம் என்றொரு தைரியம் ஏற்பட்டது.
அங்கிருந்த பீச்சில் இருவரும் சிறிது நேரம் உக்காரலாம் ன்று கடலலைகளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.
ரம்யா இதுவரை உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொன்னதேயில்ல, ஏன்னா அந்த விஷயம் உன்னைக் கஷ்டப்படுத்திரும்னு தான், ஆனாலும் இதுக்கு மேலும் அதை மறைக்கவேண்டாம்னு தோணுது. அதை இப்போ சொல்லட்டுமா? என்றான்.
என்னடா புதிர் போடுற? என்பது போல பார்த்தாள் ரம்யா.
“நாம காலேஜ்ல படிக்கும் போது நடந்த ஒரு சின்ன சம்பவம் இது. நான் உன்கிட்ட என் காதலையும் நீ என்கிட்டே உன் காதலையும் சொல்றதுக்கு முன்னாடி நடந்துச்சு!”
“என்ன நடந்துச்சு?”
“காலேஜ்க்கு வரதுக்கு, ஷேர் ஆட்டோக்கு நின்னுட்டு இருந்தேன். ஒரு ஆட்டோ வந்தது! மொத்தம் அதில் மூணு பேர் இருந்தாங்க! ஒரு பொண்ணு, கொஞ்சம் பெரிய புக்கை விரிச்சு தன்னோட முகத்தை மறைச்சு இருந்தா, அவ பக்கத்தில ரெண்டு பாரினர்ஸ். அவங்க நம்ம காலேஜ் தாண்டியும் போறவங்க போல, அவளுக்கு அடுத்து அவங்க உக்கார்ந்து இருந்தாங்க, ஒரு வெள்ளைக்காரரும், ஒரு சீனபெண்ணும் அவங்க ஜோடி. வித்தியாசமா இருந்தாலும், சிரிச்ச முகமா இருந்தாங்க. நான் உக்கார்ந்த வசத்தில் அந்த பொண்ணு முகத்தைப் பார்க்க முடில, சும்மா பேச்சுக் கொடுத்துட்டே வந்தவங்க, திடீர்னு, அந்த சீனப்பெண் என்னைப் பார்த்து, “இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ, உனக்கு எத்த மாதிரி இருக்கா, யூ போத் லுக் யூ ஆர் மேட் பார் ஈச் அதர்!” னு ஆங்கிலத்துலயும் சைகை காட்டியும் சொல்லுச்சு. அந்த வெள்ளைக்காரரும் ஆமான்னு அதுக்குத் தலையசைச்சார். “
அவளைப் பற்றிப் பேசினாலும், அந்த பொண்ணு புக்ல ரொம்ப மூழ்கி இருந்தா, எங்கள கவனிக்கவே இல்ல.!” காலேஜ் ஸ்டாப்க்கு முன்னாடியே பைக்ல வந்த கார்த்திக் கைகாட்டவும், ஆட்டோவை நிறுத்தி நான் இறங்கிட்டேன். அந்த பொண்ணு முகத்தைக் கூட பார்க்கல, ஆனால் பார்த்திருக்கலாமோன்னு தோணுச்சு ஒரு செகண்ட், மறு செகண்டே என் ரம்யாவைத் தவிர யாரை என்னால் விரும்ப முடியும்ன்னு!” அப்புறம் அதை விட்டுட்டேன். “இனிஷியல் கைரேகைல தெரியலன்னு இப்படி தழும்பைக் கையில் தடமாப் போட்டுகிட்ட. ஒரு நிமிஷம் அந்த பொண்ணைப் பற்றின சலனம் வந்ததுன்னு சொன்னாத் தாங்குவியோன்னு எனக்கு