(Reading time: 8 - 15 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

என்று சொல்லி விட்டு சன்னதியை நோக்கி முன்னே நடந்தார்.

சன்னதிக்குள் அந்த சம்யுக்தாவை அழைத்து வந்த அந்தப் பெண்மணியிடம், “நீங்க வெளிய நின்னுக்கங்க” என்றார் சுதாகர்ஜி.

அப்பெண்மணி வெளியே சென்றதும், நிமிர்ந்து அந்த சம்யுக்தாவைப் பார்த்தார். அவள் அம்மன் சிலையையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.  குங்குமத்தட்டை எடுத்து அவளிடம் நீட்டினார் சுதாகர்ஜி.

ஒரு கை நிறைய குங்குமத்தை எடுத்து, விபூதிப் பட்டை போடுவது போல் குங்குமப்பட்டையைத் தன் நெற்றியில் போட்டுக் கொண்டாள்.  பார்வை இன்னமும் அம்மனையே வெறித்துக் கொண்டிருந்தது.

சுதாகர்ஜி வருடக் கணக்கில் தான் ஓதிக் கொண்டிருக்கும் அதே மந்திரங்களை ஓதத் துவங்கினார். 

ரவீந்தருடன் சேர்ந்து பொய்யாக தான் செய்த காரியங்களுக்காய் இப்போது வருந்தினார் சுதாகர்ஜி.  “அம்மா...பொருளாதார பற்றக்குறையைச் சமாளிக்க இந்த அற்பன் செய்த தவறுக்காக என்னை மன்னிச்சிடு தாயி!...ஊர் முன்னால் எனக்கும் என் நண்பனுக்கும் பெருத்த அவமானத்தைக் குடுத்திடாதே தாயி” 

உதடுகள் அனிச்சையாய் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க, உள்ளம் குற்ற உணர்வில் மறுகிக் கொண்டிருந்தது.

அம்மனையே வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த சம்யுக்தாவின் உடல் திடீரென்று வேகமாய்க் குலுங்கியது. கை,கால்கள் அசுரத்தனமாய் நடுங்கிப் பின்னர் ஓய்ந்தன.  கண்களை இறுக மூடி, பற்களை “நற...நற”வென்று கடித்து, உடலில் ஏற்படும் ஏதோ ஒரு மாற்றத்தை அவள் தாங்கிப் பிடித்தாள்.

மகளிடம் ஏற்படும் மாற்றங்களை வெளியிலிருந்தபடியே கவனித்த அவளின் தாய், “சாமி...சாமி” என்று சுதாகர்ஜியை அழைத்தாள்.

ஆட்காட்டி விரலை வாய் மீது வைத்து அவளை அமைதியாய் இருக்கச் சொல்லி விட்டு தொடர்ந்து மந்திரங்களை ஓதிக் கொண்டேயிருந்தார் சுதாகர்ஜி.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பெரிய குலுங்கலுடன் கண் விழித்த சம்யுக்தா, அந்த இடத்தைப் பார்வையால் அளந்தாள்.  சுதாகர்ஜியைப் பார்த்து வணங்கினாள்.  பின்னர் கண்களை மூடி அம்மனைக் கும்பிட்டாள்.

சுதாகர்ஜிக்கு கலக்கமாயிருந்தது.  “என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு?...வித்தியாசமா ஏதேதோ செய்கிறாளே?”

சூழ்நிலையை மாற்ற வேண்டி, தீபாராதனைத் தட்டில் கற்பூரத்தை ஏற்றி, அம்மனுக்குக்

2 comments

  • Nice update sir 👏👏👏👏👏👏👏 idhu yaroda miracle aga irukkum??? Look forward to see what happens next <br /><br />Thank you.
  • :grin: sudhargar kuzhappam eppadi theerumendru parppom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.