(Reading time: 25 - 50 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

திறப்பு விழா வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, மற்ற இன்டீரியர் டெகரேஷன் வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள். ஜாஃபரின் வேலையினோடு, அஜயின் ஆஸ்பத்திரி கட்டட வேலையை தினமும் வந்து மேற்பார்வை பார்த்து விட்டு போவார்.

அஜய் எப்போதும், "நான் பார்த்துக்கறேன் மாஸ்டர், நீங்க எதுக்கு அலையறீங்க? உங்க வேலையே உங்களுக்கு நிறைய இருக்கு, இதுல இந்த வேலையையும் ஏன் இழுத்து போட்டுக்கறீங்க?"

"இதுவும் நம்ம வேலைதானே அஜய் தங்கம்."

"ஏன் ரொம்ப வேலையை இழுத்து போட்டுக்கறார்னு, கேளுங்க பாட்டிம்மா?"

"நம்ம ஆஸ்பத்திரிதானே அஜய் தங்கம்,  அவர் போய் பார்த்தாதான், அவனவன் பயந்து  கரெக்ட்டா செய்வாங்க. அதான் அவரே போய் பார்க்கிறார். நீயும், ஆக்டிங், ஆஸ்பிடல்னு பிசியா இருக்க தங்கம், பரவாயில்லப்பா. "

"சரி பாட்டிம்மா, மாஸ்டருக்கு பிராப்லம் ஒன்னும் இல்லேன்னா சரி பாட்டிம்மா! "

இம்ரானுக்கு பதினெட்டு வயது, காலேஜுக்கு எல்லாம் அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தான். அந்த நேரம், தனமும் அப்துலும் சாயிரா, பாரதியுடன், இந்தியாவுக்கு கிளம்பினார்கள்.

"இம்ரான், வீட்டை ஜாகிரதையாக பூட்டனும் வெளியே போகும்போதும், உள்ளே வந்தவுடனும் பூட்டனும், மறந்து விடாதே. "

"ஓகே டாட்.!"

"பிரெண்ட்ஸ் யாரையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வரக் கூடாது. நோ கர்ல்ஸ், நோ ட்ரிங்க்ஸ் அண்ட் நோ ஸ்மோக்!"

"டாட் , வென் டிட் ஐ  டூ  ஆல் தீஸ்?"

"இதுவரை நீ எதுவும் செய்யவில்லை. ஆனால்,  நாங்க யாரும் இல்லேன்னு தெரிஞ்சா இதெல்லாம்  செய்யலாம்னு உன் பிரெண்ட்ஸ் எல்லாம் உன்னை தூண்டுவாங்க."

"டாட், எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக்கறேன். யு ஹவ் டு டிரஸ்ட் மி டாட்!"

" ஐ டிரஸ்ட் யு மை சன். அப்படியே உன்னை காஷன் பண்றேன். "

" ஐ காட் இட் டாட். நான் பார்த்து இருந்துக்கறேன் டாட்!"

"ஒன் மோர் திங் ..."

"டாட், ஒரு லிஸ்ட் ஒன்று கொடுத்துடுங்க டாட் !" என்று ஒரு பொறுமை இழந்த  பார்வையுடன், தனத்தை பார்த்தான், உதவிக்காக.

ஆனால், அவள் தலையிடவில்லை. இந்த மாதிரி வயதில் இதெல்லாம் நடக்கக் கூடியது.

4 comments

  • Nice ending VJ G :-) :lol: :dance: <br />Waiting for your next story good luck🍀🍀🍀🍀🍀<br />😇😇😇<br />Yaru katthi yerinchathu sis????? Anyway nice story
  • wow :clap: :-) arumaiyana epi & story :hatsoff: :hatsoff: ulagaththil ellorum ippadi irunthal nandraaga irukkum :-) :thnkx: :thnkx: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.