(Reading time: 7 - 14 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

சம்பவங்களையெல்லாம் பத்திரிக்கைகள் ஒண்ணுக்கு ரெண்டா தங்களோட கற்பனைகளையும்...யூகங்களையும் கலந்து எழுதித் தள்ளிட்டதால...மார்க்கெட்ல இப்ப இந்தக் காம்ப்ளக்ஸ் பில்டிங்கிற்கு ரேட் ரொம்ப ரொம்ப தரை ரேட்டாய்த்தான் இருக்கும்!...அந்த தொகையை வைத்து இன்னொரு காம்ப்ளக்ஸ் பில்டிங் வாங்கறதுங்கறது...நாட் பாஸிபிள்!”  சாம்பசிவம் கவலையோடு சொன்னார். 

ஸோ வாட்?...மீதிக்கு ஏதாவது பேங்க் லோன் அப்ளை பண்ணிடுவோம்!

நல்ல ஐடியாதான்...பட் அவ்வளவு பெரிய தொகையை லோனா வாங்கனும்னா...அதுக்கு ஈக்வலா செக்யூரிட்டி தரணுமே!...இப்ப இருக்கற நிலைல ஐ காண்ட்!....என்னால எந்தவித செக்யூரிட்டியும் தரவே முடியாது!சாம்பசிவம் தன் உண்மை நிலையை எடுத்துரைக்க

ம்ம்ம்என்று கீழ்த் தாடையைத் தட்டியபடி யோசித்த விக்டர் விஸ்வநாத்

நேஷனல் பேங்க் ரீஜனல் மேனேஜர் என்னோட நண்பர்தான்...நான் வேணா அவர்கிட்ட பேசிப் பார்க்கிறேனே!என்றபடி தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்து உடனே டயல் செய்தார்.

ஹலோ...மிஸ்டர் தேவநாதன்!...ஹவ் ஆர் யூஎன்று ஆரம்பித்து எதையெதையோ பேசி விட்டு கடைசியில்

மிஸ்டர் தேவநாதன்...உங்களுக்கு விஸ்வா டவர்ஸ் சாம்பசிவம் தெரியுமா?...யெஸ்...யெஸ்...அதே காம்ப்ளக்ஸ்தான்!...அவர் இப்ப அந்தக் காம்ப்ளக்ஸ் பில்டிங்கை விற்கலாம்னு இருக்கார்!...வித்திட்டு வேற காம்ப்ளக்ஸ் வாங்கப் போறார்!...அதுக்கு கொஞ்சம் பணம் ஸார்ட்டேஜ்!...உங்க பேங்க்லதான் லோன் போடப் போறாராம்!...என்னது செக்யூரிட்டியா?..அங்கதான்ப்பா பிரச்சினையே!...இப்போதைய நிலைல அவரால் எதுவும் செக்யூரிட்டியா தர முடியாது!...வித்அவுட் செக்யூரிட்டி லோன் கிடைக்க நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்!...வாட்?..ஓ...நேர்ல வரவா?...நான் மட்டுமா?...இல்லை மிஸ்டர்.சாம்பசிவமும் வரணுமா?....ஓ.கே.ரெண்டு பேருமே வர்றோம்!பேசி விட்டு இணைப்பைத் துண்டித்த விக்டர் விஸ்வநாத் கல...கலவென்று சிரித்தார்.

என்ன மிஸ்டர் விஸ்வநாத் சிரிக்கறீங்க?”

இல்லை...அந்த தேவநாதன்...நேர்ல வரச் சொன்னா அதுக்கு அர்த்தமே வேற!

யூ மீன்...அவர் ஸம்திங் எதிர்பார்க்கிறார்ன்னு சொல்றீங்க!...அதானே?”

யெஸ்!...பொதுவா மனுஷங்க மூணு விஷயத்துக்கு சபலப்படுவாங்க!...பொன்...பெண்...மண்!...இந்த தேவநாதன்...இரண்டாவது விஷயத்துக்கு அடிமை!...அவனுக்கு தேவை கேர்ள்ஸ்!...அதைக் குடுத்திட்டா அவனை ஈஸியா சாய்ச்சிடலாம்!விஸ்வநாத சொல்லச் சொல்ல,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.