(Reading time: 16 - 32 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

அடுப்பில இருக்கிற பாலைக் கவனிக்கணும் என்றவள், நமக்குப் பொறுப்புகள் அதிகமாகுது தினேஷ். திருமணமான இன்னிக்கே நாம பெற்றோரும் ஆகிட்டோம். அந்த குழந்தைகளுக்குத் தேவையான மாதிரி நாம தயாராகணும்.! என்றவள் மேலும் தொடர்ந்து தீர்க்கமான குரலில், நமக்குத் திருமணம் நடந்த விஷயம் என் அம்மா, அப்பாவுக்கும் உங்க அண்ணனுக்கும் இந்நேரம் கண்டிப்பாகத் தெரிஞ்சிருக்கும். அவங்களா நமக்குப் போன் பண்ணா நாம பேசலாம். இல்லைனா நாம அவங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்றாள். அவள் சொல்வதற்கு ம் கொட்டியவன், இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகும்னு நம்பிக்கை இருக்கு என்றவாறே இருவருக்கும் காபி கலந்து எடுத்து வந்தான். அலைபாயுதே, பாய்ஸ் னு காலேஜ் படிக்கும் போது சினிமால இப்படிக் கல்யாணம் பண்றதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கேன். இப்போ என் கல்யாணமே இப்படி நடந்ததை நினைச்சா எனக்கே நம்ப முடியாமல் வியப்பா இருக்கு என்றாள்.

ஒரு வேளை, நான் உன் வாழ்க்கைல குறுக்கிடாமல் இருந்திருந்தா, மற்ற பெண்களுக்கு நடக்கிற மாதிரி அம்மா,அப்பா, சொந்தகாரங்க எல்லாரும் இருந்து, ஊரைக் கூட்டி, மேளம் கொட்டி, ஜாம் ஜாம்னு ரொம்ப மகிழ்ச்சியா உன் கல்யாணம் நடந்திருக்கும் என்றான்.

என் வாழ்க்கைல இருக்கிற உண்மையான மகிழ்ச்சியே நீ தான், உன்னை விட, அதெல்லாம் எனக்குப் பெரிசு இல்ல என்றாள் அவனை தோளில் சாய்ந்து கொண்டே. தினேஷ், ஏற்கனவே உன்கிட்ட  அடிக்கடி கேட்ட கேள்வி தான், ஆனாலும் அதைக் கேட்க எனக்கு சலிக்கறதே இல்ல! ஏன்டா உனக்கு என்னை மட்டும் அவ்வளவு புடிச்சது? ரம்யா கேட்க,

“என்னவோ எனக்குக் காரணம் சொல்லத் தெரியல! உன்னைப் பார்த்த முதல் கணமே உன்னை எனக்கு ரொம்பப் புடிச்சது! ரொம்ப யோசிச்சுப் பார்த்தாலும் என்னன்னு சரியான காரணம் என்னனு புரியல! சில சமயம் நமக்கு  ரொம்பப் பிடிச்சவங்களோட சாயலில் இன்னொருத்தரோ அல்லது அவங்களோட குணாதிசயங்கள் கொண்ட இன்னொருதாரோ நம்ம லைப்ல க்ராஸ் ஆனா, நமக்கு ஆட்டோமேட்டிக்காக நமக்கு அவங்களைப் புடிக்க ஆரம்பிக்கும். என் அம்மாவை எனக்கு ரொம்பப் புடிக்கும். அவங்க கல்லூரி நாட்களில் எடுத்த அவங்களோட இளவயது புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அவங்களோட கண்களில் இருக்கிற ஒரு கனிவும்,பாசிட்டிவிட்டியும் உன் கண்களில் இருக்கும். அந்த கண்கள் தான் என்னை ஈர்த்ததுன்னு சொல்லலாம். அதே போல அம்மாவோட உதவி செய்ற குணம், உன் பிரெண்ட்ஸ்கோ, கிளாஸ்மேட்ஸ்கோ படிக்கிற சமயத்தில லேபில, அசைன்மென்ட்ஸ்ல நீ ஹெல்ப் பண்றத பார்த்திருக்கேன். அதெல்லாம் தான் எனக்கு உன்னை ரொம்பப் புடிக்க வச்சது.! தினேஷ் பேசப் பேச ரம்யா அவன் மேல் சாய்ந்து கொண்டே அவன் வார்த்தைகளில் லயித்திருந்தாள். சரி இப்போ நீ சொல்லு, உனக்கு என் என்னைப் புடிச்சது?”சத்தியமா எந்த

5 comments

• Such a nice story and a very good ending...
This story reminded lot of moments in college life..lab assignment seminar projects life stories in college final year your etc...
• Avanga parents perumai padura alavukku vazhandhu kattitanga rendu perum :hatsoff: nalla puridhal irundhal mattume idhunsadhiyam :yes: ivanga rendu peroda unconditional love is simply superb....
Azhagana kadhai ma'am 👏👏👏👏👏👏👏
Parents um konjam pillaigalukaga yosithu parkalam, thappana choice aga irundhal ippadi otha leg la stand panuradhu okay...but ivangala pathi theriyamal just caste pidichi thongikittu irukamal they can stand for their kids.
Good one ma'am :hatsoff: rendu part um :cool:
Thank you and wish you good luck for your future endeavours 👍

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.