This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
ரம்யாவும் தினேஷும் அந்த இரு குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து அவர்களின் முடிவில் தெளிவாகவே இருப்பதைக் கண்ட பின்னர், வார்டன் ,” நீங்கள் அரசாங்கக் கொள்கைகளின்படி தத்தெடுப்பு செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால் அதற்குக் கால நேரம் அவகாசம் எடுக்கும். அதுவரை நீங்கள் இருவரும் இந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களாக இருக்கலாம். அடுத்த வார இறுதியில் இங்கு வாருங்கள். அவர்களை எவ்வாறு வளர்ப்புப் பெற்றோராகப் பார்த்துக் கொள்ளுவது மற்றும் எப்படி அவர்களைத் தத்தெடுப்பது என்பதைக் குறித்து நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவோம். பின்னர் நீங்கள் முடிவு செய்ய நேரம் ஒதுக்குங்கள்!" என்றார். சரியென்று இருவரும் வார்டன் மேடம் சொன்னதுக்கு சம்மதித்து அங்குள்ள குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிடத் தொடங்கினர். ரம்யா தனது பொருட்களையெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே தினேஷின் இடத்திற்கு மாற்றிவிட்டாள். தனது ஹாஸ்டலில் இருந்து ஒரு பையுடன், அவர் திருமணத்திற்கு வந்தாள். எனவே, ஹோமில் இருந்தவாறே, நண்பர்கள் விடைபெற்று செல்லவும், மாலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து நேரே தினேஷின் அறைக்குச் சென்றனர்.
"ரம்யா ஆர் யூ நாட் எமோஷனல்? உன் அம்மா, அப்பாவைப் பற்றி நீ துளியும் நினைக்கலயா?"என்று தினேஷ் கேட்கவும்,”. நான் அவர்களைப் பற்றி நினைக்கிறேன்டா. ஆனால் அவர்கள் என் வாழ்க்கையில் நீ இருப்பதையும் நீயும் நானும் இணையாக இருப்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களைப் போலவே எனக்கு நீயும் முக்கியம் தினேஷ். எனது முடிவு சரியானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள நான் காத்திருப்பேன். நீயும் காத்திரு!” என்றவள். நான் முகம் கழுவி டிரஸ் மாத்திட்டு வர்றேன் என்றாள். சில நிமிடங்களில், சேலையில் இருந்து ஒரு சுடிதார் டாப்சுக்கு மாறியவள், பால் காய்ச்ச சமையலறைக்குள் சென்றாள். தினேஷும் உடையை மாற்றிவிட்டு அவளுக்கு உதவ சமையலறைக்குள் வந்தான். அவன் அவள் கன்னங்களை இரு கைகளால் பிடித்து, அவள் கண்களைப் பார்த்தான், "இது உண்மையா? இது உண்மை தானா? நீ என்னுடன் என் வீட்ல இருக்கியா? நமக்கு உண்மையிலேயே கல்யாணம் முடிஞ்சிருச்சா? இது கனவில்ல நிஜம்னு உறுதிப்படுத்த நான் உன்னைக் கன்னத்தில கிள்ளலாமா?" என்றான். ஒரு புன்னகையுடன், ரம்யா அவன் நெற்றியில் முத்தமிட்டாள், இது கனவில்ல தினேஷ், நிஜம் தான், நமக்குத் திருமணமாகிவிட்டது. நான் உன் மனைவி, நீ என் கணவன், மனசுப்படி, சட்டப்படி, இதோ தாலி கட்டி, மாலை மாற்றி, மோதிரம் மாற்றிக் கொண்ட நம் சம்பிரதாயங்களின் படி. இனி இந்த பிறப்பு மட்டுமல்ல, எப்பிறப்பும் நான் உன்னுடையவள் நீ என்னுடையவன் என்றாள். அவளை இறுகப் பற்றி அணைத்துக் கொண்டான். அவனை விலக்கியவள், டேய், நான்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
This story reminded lot of moments in college life..lab assignment seminar projects life stories in college final year your etc...
Azhagana kadhai ma'am 👏👏👏👏👏👏👏
Parents um konjam pillaigalukaga yosithu parkalam, thappana choice aga irundhal ippadi otha leg la stand panuradhu okay...but ivangala pathi theriyamal just caste pidichi thongikittu irukamal they can stand for their kids.
Good one ma'am
Thank you and wish you good luck for your future endeavours 👍