நட்பு இங்கு அண்ணன் தங்கை உறவாக
நறுமணம் வீசிக் கொண்டிருக்கிறது...
*********************
ஜனாவின் கம்பெனி வளர்ச்சிக்கு எந்த அளவு ஸ்வீனா பக்கபலமாக இருந்தாளோ அதை விட அதிகமாக மிக குறுகிய காலத்தில் ஸ்வீனாவை வளர வைத்து விட்டான் ஜனா... இப்போது அவள் மிகவும் பிரபலமாகி விட்டாள்.
ஆமா... அதான் தெரியுதே... ஒரு ஃபோன் பண்ணி பேச முடியாத அளவு மேடம் பிஸியாகிட்டாங்களே...
அப்படி இல்லை ஜனனி....
அப்போ எப்படி... அதை விடுங்க... இப்போ சசி கூட பேசுறது இல்லை... அது ஏன் சந்தியா கூட பேசலை. நான் அழைக்கும் போதெல்லாம் பிஸியா இருக்கிறாள். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எங்கிட்ட பேசினாலும் எப்போதும் போல பேச முடியவில்லை. ஏதோ ஒரு பெரிய இடைவெளி வந்து விட்டது போல இருக்கிறது.
ஏனோ தெரியவில்லை... இவ்வளவு பெரிய உலகத்தில் இவ்வளவு அதிகமான மக்கள் கூட்டத்தில் நான் மட்டும் தனியா இருக்கிறது போல இருக்கிறது என்று சொல்லும் போதே அவள் மனதில் தோன்றி இருக்கும் வெறுமை அஸ்விட்க்கு புரிந்தது.
ஆதரவாக அவள் தலையை வருடியவன் இந்த மாதம் முடிய இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது. அதற்குள் எல்லாம் மாறி போய் விடும் என்றான்.
மாதம் முடிய போகிறதா?... ஏப்ரல் வந்து விட்டதா என ஆர்வமாக கேட்ட ஜனனியிடம் ஆமா... ஏப்ரல் மாதம் ஏதாவது ஸ்பெஷல் மாதமா??? என்றான்.
இல்லை... இல்லை... அப்படி ஏதும் இல்லை என்று அவசரமாக மறுத்த போதே அவள் ஏதோ மறைக்கிறாள் என்று தெளிவாக புரிந்தது. ஆனால் அவள் சொல்ல விரும்பாததை கேட்டு அவளை தொல்லை பண்ண விரும்பாதவனாய் இப்போ கிளம்புவோமா என்றான்.
சரி என்று இருவரும் ஆபிஸை நோக்கி பயணிக்க அவள் மனதில் பயணித்தது ஒரே ஒரு சிந்தனை மட்டும் தான்.
இத்தனை துயரங்களை கடந்து வந்த என்னவனை இனி எப்போதும் கண் கலங்க விட மாட்டேன். அவனை என் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பேன்.. என் உள்ளத்தை கொள்ளை கொண்ட அவனுக்கு மகிழ்ச்சியை மட்டும் அள்ளி வழங்கிட வேண்டும் என்ற ஒரு முடிவோடு பயணித்தாள்.
இனி சந்தோஷ சாரல் ஜனாவின் வாழ்க்கையை நனைக்கிறதா என்று பார்க்கலாம்.... ஜனாவின்