தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 06 - பிந்து வினோத்
“அப்போ நான் போய் தான் ஆகனும்??”
சோகமாக கேட்ட மஞ்சுவை அணைத்துக் கொண்டான் மனோஜ்!
“நீங்க மேனேஜர் தானே? துர்காவோட ஃபிரென்ட் தானே? நீங்க சொன்னா துர்கா கேட்க மாட்டாங்களா??”
மனோஜ் அவனின் அணைப்பில் இருந்த மனைவியை இன்னும் அதிகமாக அணைத்துக் கொண்டான். அது சொன்ன பதில் மஞ்சுவிற்கு புரிந்தது!
“போங்க மனோஜ், ரொம்ப ஓவர் சின்சியரா இருக்கீங்க. இதுக்கெல்லாம் சேர்த்து மொத்தமா உங்களுக்கு ஆப்பு வைக்கப் போறாங்க,” என்று அலுத்துக் கொண்டாள் மஞ்சு.
“அப்படி எல்லாம் கிடையாது PBS. நான் நிர்மலுக்கு ரெகமென்டேஷன் கொடுத்தேன்னு துர்கா ஏற்கனவே என் மேல கோபமா இருக்கா. நீ என் ஒய்ஃப்ன்னு அவளுக்குத் தெரியாதா? அதும் இல்லாம அவ சொல்றது ஜெனரல் ப்ரோசீஜர் தானே? அதை வேண்டாம்னு எப்படி சொல்றது?”
“அதானே, உங்க மனைவியா இருந்தாலும் ரூல்ஸ் படி தானே நடக்கனும்! வேலையை கன்டினியூ செய்றேன்னு சொன்ன என் கிட்ட, பெரிய புத்தர் மாதிரி பிலாசபி எல்லாம் பேசிட்டு இப்போ சின்சியர் மேனேஜர் திலகமா பேசுங்க! நான் போறதுல உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தம் கிடையாது. எப்போடா இவ கிளம்பி போவான்னு இருக்கீங்க, அப்படி தானே??”
“என்ன pbs இப்படி சொல்லிட்ட? உன் மேல எனக்கு எவ்வளவு காதல்ன்னு உனக்கு நல்லா தெரியும். இவ்வளவு வருஷத்துல உன்னைத் தவிர வேற யாருக்காகவும் அம்மாவை நான் எதிர்த்து பேசினதே கிடையாது. என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்ட?”
“நீங்க சொல்றது எல்லாம் உண்மைன்னு நான் எப்படி நம்புறது?”
“100% உண்மை pbs, நம்பு!”
“அப்போ ப்ரூவ் செய்ங்க!”
“எப்படி ப்ரூவ் செய்றது?”
“pbs க்கு ஃபுல் ஃபார்ம் சொல்லாம ஏமாத்திட்டு இருக்கீங்களே, அதை என்னன்னு சொல்லுங்க...”
“அதுக்கும் என் காதலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?”
“எல்லாம் இருக்கு, சொல்லுங்க...”
“PBS என்பது ஒரு டிவி சானல்?”
“என்னது?”
“நம்ம ஊருல எப்படி தூர்தர்ஷன் இருக்கோ அந்த மாதிரி இங்கே இருக்க கவர்ன்மென்ட் டிவி பேரு PBS – பப்ளிக் பிராட்கேஸ்டிங் சர்வீஸ்”
“இதை எனக்குப் பேரா வச்சிருக்கீங்க???’