(Reading time: 9 - 18 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

இவங்க பெண் கூட நான் சேருவேன்!...அதுவரைக்கும் இந்தப் பெண் அவங்க வீட்டிலேயே இருக்கட்டும்!...நம்ம வீட்டுக்கு வர வேண்டாம்!...” தீர்மானமாய்ச் சொன்னான்.

கொதித்தெழுந்தார் ராமலிங்க பூபதி.

“ஓய் பொன்னுரங்கம்...என்னய்யா?...என்ன நாடகம் நடக்குது இங்கே?...நீங்க விளையாடறதுக்கு என் பொண்ணோட வாழ்க்கை என்ன விளையாட்டு மைதானமா?...ஓஹோ...இதை நான் விட மாட்டேன்யா....இதை நான் பெரிய பிரச்சினையாக்கி...பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்கத்தான் போறேன்!...என் பொண்ணுக்கு நீதி கிடைச்சாகணும்” கத்தினார்.

அந்தக் கத்தலையும், தன் பெற்றோரின் கெஞ்சலையும் துளியும் கண்டு கொள்ளாமல் நிதானமாய் எழுந்து, தன் பைக்கை நோக்கி நடந்த தனசேகர், கோபத்துடன் அதை ஸ்டார்ட் செய்தான்.

அவனை நோக்கி ஓடிய சுந்தரி அவனைச் சமாதானப்படுத்த முயல,  அவளைத் துளியும் கண்டு கொள்ளாமல் தன் வீட்டை நோக்கி “விர்ர்ர்ர்ர்ர்”ரென்று பறந்தான் தனசேகர்..

மண்டபமே ஸ்தம்பித்து நின்றது.

மல்லிகாவின் முதலிரவுப் படுக்கையிலிருந்த மல்லிகைகள் மரணித்துப் போயின. தட்டிலிருந்த பலகாரங்களும், பழங்களும் பாழாகிப் போயின. செம்பிலிருந்த பால் திரிந்து போயிற்று.

கனவுக் கோட்டைகள் சரிந்து போனதில் கண்ணீர்க் கோட்டையின் ராணியானாள் மல்லிகா.  அழுகை தேசத்தின் அரசியானாள்.

அதே நேரம், தன் வீட்டில் முரளியைப் பிரிந்த சோகத்தைத் தாள முடியாமல், உறக்கமின்றி உலாத்திக் கொண்டிருந்தான் தனசேகர்.

தொடரும்

Go to Kai kortha priyangal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.