(Reading time: 9 - 18 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

அறைக்குள் போக மாட்டேன்” என்று சொல்ல,

“சம்மந்தி...ஒரு நிமிஷம் இருங்க!...மாப்பிள்ளை அப்படி என்னதான் கேட்கிறார்?ன்னு பார்ப்போம்?” என்ற ராமலிங்க பூபதி,

“நீங்க கேளுங்க மாப்பிள்ளை....உங்களுக்கு இந்தக் க்ல்யாணத்துல என்ன குறை ஏற்பட்டிடுச்சு?”  தனசேகரைப் பார்த்துக் கேட்டார்.

“அப்பா...நீங்களும் அம்மாவும் முரளி வேலை பார்க்கிற அந்த ரைஸ் மில்லுக்குப் போயிருந்தீங்களா?” முகத்தை இரும்பு போல் வைத்துக் கொண்டு கேட்டான் தனசேகர்.

“ஆ...ஆ...மா..ம்!” என்றார் பொன்னுரங்கம்.

“எதுக்குப் போனீங்க?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான்.

“அது...அந்த ரைஸ் மில் ஓனர்க்கு பத்திரிக்கை வைக்க” என்றாள் சுந்தரி சட்டென்று. 

ஆனால் பொய் சொல்லிப் பழக்கமில்லாத அவளால் முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை.  அதுவே அவளைக் காட்டிக் கொடுத்தது.

“இல்லையே....நாம எல்லோரும் பெரிய அத்தை ஊருக்குப் போயிட்டு வரும் போது வர்ற வழில...அந்த ரைஸ் மில் ஓனர் வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்தி, “நீ காரிலேயே இருப்பா...நாங்க போய் பத்திரிக்கை குடுத்திட்டு வர்றோம்”ன்னு சொல்லிட்டு..நீங்களும் அம்மாவும் அப்பத்தானே பத்திரிக்கை குடுக்கப் போனீங்க?” கொக்கி போட்டான் தனசேகர்.

“அது...”என்று பொன்னுரங்கம் திணற,

“நான் சொல்லட்டா?...நீங்க ரெண்டு பேரும்...ரைஸ் மில்லுக்குப் போய்...முரளியைக் கூப்பிட்டு மிரட்டி...ஊரை விட்டே போகச் சொல்லியிருக்கீங்க...அப்படித்தானே?” கண்களில் நெருப்புப் பொறி பறக்க கேட்டான் தனசேகர்.

பொன்னுரங்கமும், சுந்தரியும் பதில் சொல்ல முடியாமல் சிலையாய் நிற்க,

“ஏன்?...ஏன் அப்படி செஞ்சீங்க?...இப்ப அவங்க குடும்பத்தோட இந்த ஊரை விட்டே போயிட்டாங்க!..இந்தப் பாவம் நம்மை சும்மா விடுமா” கத்தல் குரலில் தனசேகர் கேட்டான்.

“இல்லைப்பா...நாங்க ஒண்ணும் அவங்களை ஊரை விட்டுப் போகச் சொல்லலை!... “நீ எங்க பையன் கூட சிநேகிதம் வெச்சிருக்கறது...பொண்ணு வீட்டுக்காரங்களுக்குப் பிடிக்கலை”ன்னு மட்டும்தான் சொன்னோம்!...அவனே யோசனை பண்ணிப் பார்த்திட்டு..அவனால் உன்னோட வாழ்க்கையில் சந்தோஷம் கெட்டுடக் கூடாதுன்னு நெனச்சிட்டுப் போயிட்டானோ என்னவோ” என்று சமாளித்தாள் சுந்தரி.

“ஆக.... “இவங்க வீட்டுப் பெண் என் கூடச் சேர்ந்து வாழணும் என்பதற்காக...என்னோட நண்பனை நீங்க என் கிட்டேயிருந்து பிரிச்சீங்க!...அப்படித்தானே?...இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க....என்னிக்கு என் நண்பன் மறுபடியும் என் கூட சேர்றானோ?...அன்னிக்குத்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.