(Reading time: 5 - 10 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

“எங்க வீட்டுல அப்பா மட்டும் தான் வேலைக்கு போனார்... அதனால எல்லா சுமையும் அவர் மேல இருக்குன்னு அம்மா அப்பப்போ சொல்றதை கேட்டு இருக்கேன்... அதெல்லாம் இப்போ ஞாபகம் வந்துச்சு... அப்புறம் நம்ம கல்யாண நேரத்துல வந்த பணம், நகை பேச்சு வார்த்தைப் போல பிற்காலத்துல நம்ம பசங்களுக்கும் வர வாய்ப்புகள் இருக்கு... இதை எல்லாம் யோசிக்கும் போது எல்லாத்தையும் நீயே செய்ன்னு உங்க மேல தூக்கிப் போடுறது சரியான்னு கேள்வி வருது... நாம இரண்டுப் பேரும் சம்பாதிச்சா சேர்த்து வைக்கலாம், குடும்பத்துக்கு அதிக வசதிகள் செய்யலாம்... இப்படி என்னென்னவோ தோணுது...”

  

மனோஜ் உடனே பதில் சொல்லவில்லை...

  

அவனின் அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல்,

  

“மனோஜ்??? என்ன அமைதியா இருக்கீங்க??? கோபமா??? எதுவா இருந்தாலும் நேரா சொல்லுங்க மனோஜ்...” என்றாள் மஞ்சு...

  

“கல்யாண டைம் பேச்சு வார்த்தை பத்தி சொன்னீயே... அப்போ அம்மா பேசினது இன்னும் உன் மனசுல இருந்துட்டேவா இருக்கு? சாரி மஞ்சு... நான் அதை அவாயிட் செய்திருக்கனும்...”

  

“ஹையோ மனோஜ் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... ஒரு பேச்சுக்கு தான் அதை சொன்னேன்... உண்மையா நான் சொல்ல வந்தது என்னன்னா, குடும்ப சுமையை நாம இரண்டுப் பேருமா சேர்ந்து தாங்குவோம்... உங்க ஒருத்தர் மேல பாரத்தை போடுறது சுயநலமா தோணுது...”

  

“ப்ச்... எனக்காக இப்போ மாத்தி சொல்றேன்னு புரியுது pbs... அம்மாவை இந்நேரம் நீ புரிஞ்சு இருப்பேன்னு நினைச்சேன்... அவங்க அன்னைக்கு கோபத்துல தான் அப்படி பேசினாங்க...”

  

மஞ்சுவிற்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது...

  

ஆண்களுக்கு பிறந்த வீட்டு பாசம் இல்லை என்று யாராவது சொன்னால் அது சுத்தப் பொய்...!!! என்ன, பெண்கள் அளவிற்கு அவர்கள் அதை வெளிப்படையாக காட்டிக் கொளவது

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.