(Reading time: 5 - 10 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

கிடையாது...!!!

  

இதை கணவன் விஷயத்தில் மஞ்சு கடந்த ஒரு வருடமாக நன்றாகவே புரிந்துக் கொண்டிருந்தாள்...

  

மனோஜ் மீண்டும் அதை ‘ப்ரூவ்’ செய்யவும், அவளுக்கு சிரிப்பு தான் வந்தது...!!!

  

அவள் சொலல் ஆரம்பித்தது என்ன, அவன் அதை எடுத்துக் கொண்டு போகும் திசை என்ன???!!!

  

மஞ்சுவின் அமைதி மனோஜை குழப்பி இருக்க வேண்டும்...

  

“என்ன pbs திடீர்னு அமைதி ஆயிட்ட?? “ என்று விசாரித்தான்.

  

‘ஆல் பிகாஸ் ஆப் யூ முசுட்டு மேனேஜர்’ என்று சொல்ல ஏற்பட்ட ஆசையை அடக்கி கொண்டு,

  

“அமைதி எல்லாம் ஆகலை மனோஜ்... இப்போ உடனே அவசரப்பட்டு ரிசைன் செய்ய வேண்டாம்னு எனக்கு தோணுது... ஏதாவது நல்ல ஆன்சைட் ஆப்பர்ச்யூனிட்டி கிடைக்குதான்னு பார்க்கிறேன்... கிடைச்சா அக்ஸப்ட் செய்துக்குறேன்... ஒரு த்ரீ மன்த்ஸ், ஃபோர் மன்த்ஸ் பார்ப்போமே...” என்றாள்.

  

“pbs, என்னுடைய ஆசை உன்னை பூ மாதிரி பார்த்துக்கனுங்குறது... ஆனால், உனக்கு வெயிட் பண்ணி பார்த்து ஆப்பர்ச்யூனிட்டி கிடைச்சா ஏத்துக்குறது சரின்னு பட்டா, நான் அதை வேண்டாம்னு சொல்ல விரும்பலை... உனக்கு எது பிடிக்குதோ, அதை செய்... நான் எப்போவும் உனக்கு பிடிச்சதை தான் செய்ய விரும்புறேன்... உன் சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம்...”

  

மனோஜ் இதை தான் சொல்வான் என்ற நம்பிக்கை மஞ்சுவிற்கும் இருந்தது...

  

ஆனால் அதை அவன் சொன்னப்போது... அதுவும் மென்மையாக, கனிவுடன் அவளிடமே சொன்னப்போது மஞ்சுவிற்கு தேனாக இனித்தது...

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.