(Reading time: 29 - 57 minutes)

 “ச்சே...பங்க்சுவாலிட்டின்னா என்ன விலைன்னு கேப்பான் போல இந்த கார்த்திக். மணி ரெண்டை தாண்டியாச்சு இன்னும் போனை காணும்”, சந்தியா சக்தியிடம் கார்த்திக்கை அர்ச்சித்து கொண்டிருந்தாள்.

 

அவன் எந்த நேரத்திலும் அழைப்பான் என தோழிகளை அவசரபடுத்தி சாப்பிட்ட வைத்து மொட்டை மாடி கூரைக்கு கூட்டி வந்தவள் அல்லவோ அவள்.

 

“எங்களை தான் ஒழுங்கா சாப்பிடவிடலை... அவனாவது நிம்மதியா சாப்பிடட்டுமே.... அதான் 3 மணி வரைக்கும் டைம் கொடுத்து இருக்கியே. சும்மா  ஏன்  குட்டி போட்ட பூனை மாதிரி இங்கிட்டும் அங்கிட்டும் சுத்திக்கிட்டு இருக்க. அடங்குடி. அம்மாகிட்ட இண்டர்வியூ கால், ப்ரண்ட்ஸ் எனக்கு ஹெல்ப் பண்ணனும் எப்படி தான் கூசாம பொய் சொல்லறியோ. இன்னைக்கு நீ சொன்ன மாதிரி காபி ஷாப் கூட்டு போகாட்டி உன்னை கொன்னே புடுவோம்” என்றாள் சக்தி.

 

சந்தியா “கண்டிப்பா போவோம். உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே பிளான் பண்ணி அம்மாட்ட பெர்மிஷன் வாங்கி வச்சுட்டேன். நல்ல வேளைக்கு அப்பா இல்ல.  இல்லாட்டி  கஷ்டம் தான்.” என, சக்தி அதற்கு “அதான் மேடம்..பர்த்டேவை இன்டிபென்டன்ஸ் டே மாதிரி கொண்டாடுறீங்களா. அப்பான்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வருது. வாத்து உனக்கு ஐபோன்ஐ பர்த்டே கிப்ட் பண்ண சொல்லி அனுப்பிவிட்டு இருந்தான்.” என்றாள்.

 

ஒரு தோழி, “வாத்து னா யாருப்பா .....ஐபோன்லாம் கிப்ட் பண்ற அப்பாட்டக்கர்?” என கேட்க,

“என்னோட பெஸ்ட் ப்ரன்ட் வினோத் - செல்ல பேரு  வாத்து. நாங்க ப்ரண்ட்ஸ்ஸா சேர்ந்து பார்ட் டைம்மா இன்டெர்நெட் வழியா பாடம் சொல்லிகொடுக்கிற பிஸ்னஸ் பண்றோம். அது விஷயமா ஐபோன் தேவ பட்டது அதான் அனுப்பி இருக்கான்.” என்றாள் சந்தியா. “கலக்குற சந்தியா. அப்புறம் எதுக்கு வேலைக்கு போற...அதே பிஸ்னஸ்ஸில் இறங்க வேண்டியது தான.” என்றாள் மற்றொருத்தி.

 

சக்தி அதற்கு “அப்படி பண்ண முடியாது. இது எங்க பேட்ச்மேட்ஸ் எல்லாம்  க்ரூப்பா  பண்றது. லாபத்தை நல்ல விஷயங்களுக்கு கொடுத்திடுவோம். எங்க கான்செப்ட், சர்வீஸ் பண்றது ஒரு அன்றாட கடமை. அதுக்கு வாழ்க்கையே தியாகம் பண்ண வேண்டியது இல்ல. தினமும் 1-2 மணி நேரம் அதுக்கு ஒதுக்குவோம். டிவி பாக்கிற மாதிரி, இப்படி அரட்டை அடிக்கிற மாதிரி. இதை எல்லாம் நம்ம ஜந்து” என்றவளை பேச விடாமல் தடுத்த சந்தியா,

 

“போதும் சக்கு. இவங்க நம்ம கூட MBA படிக்காததுனால வினோத் என்னோட பாய் ப்ரண்ட்ன்னு தப்பா  நினைக்க கூடாதுன்னு தான் நம்ம பிஸ்னஸ் பத்தி சொன்னேன். இது தான் சாக்குன்னு அவங்களுக்கு லெக்ச்சர் எடுக்காம, ஒழுங்கா கார்த்திக்கிட்ட பேச, நான் சொல்லி கொடுத்த டையலாக்கை சொல்லு பாப்போம் “ என்றாள்.

 

கார்த்திக்கின் வீட்டில் சந்தியாவை பற்றி பேச்சு தான் ஓடிகொண்டிருந்தது. சூர்யா, கள்ளி பாலால் அவள்  பாட்டி அவளை  சாகடிக்க எண்ணியதை சொன்னவுடன், கார்த்திக், “ம்....புத்திசாலி பாட்டி...” என சொல்ல சௌபர்ணிகாவின் அனல் பார்வை வீச்சில் அமைதியானான். சௌபர்ணிகா பின்,  சந்தியாவிற்கு பள்ளி பருவத்திலேயே தான்  ஓவிய கலையை அறிமுக படுத்தி பயிற்சி அளித்ததாகவும், பின் அவள் குருவை மிஞ்சும் சிஷ்யையாக  உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைய ஆரம்பித்ததாகவும் சொன்னார். சந்தியாவுடன் சேர்ந்து அன்பு இல்லத்திற்கு நிதி திரட்ட வருடம் இருமுறை ஓவிய கண்காட்சி நடத்தி வருவதாகவும், கடந்த இரு ஆண்டுகளாக சதாசிவத்தின் உடல் நிலை காரணமாக  அதில் ஈடுபாடு இல்லாமல் போனது என்றார். அவர்கள் வீட்டு வரவேற்பறையில் உள்ள கண்ணை கவரும் கலைநயம் வாய்ந்த அந்த மயிலிறகு ஓவியம் அவள் வரைந்தது என்ற போது அனைவரும் வியந்து பாராட்டினர். சூர்யா அவளின் சிறுவயது குறும்புகளை சூர்யா சொல்ல, ஒரே சிரிப்பலை. கார்த்திக்கிற்கும் அவளை பற்றி கேட்க ஆசையாய் இருந்தாலும், மனதிற்குள் அவளை வசை பாடிக்கொண்டிருந்தான்.

 

உணவருந்திய பின் கார்த்திக் மீராவிடம் “அண்ணி, சீக்கிரம் மாடி பால்கனி வாங்க” என்று அவள் பதில் எதிர்பார்க்காமல்  சென்றான்.

 

அதை கவனித்த சூர்யா “இந்த லக்ஷ்மணன் கோடு போட்டானா...என் சீதைக்கு.. என்னை டீல்ல விட்டாச்சு தான ?...ஒரு அஞ்சு நிமிஷம் பாட்டு பாடி தூங்க வச்சிட்டு போடா” என கெஞ்சலாக கேட்க, மீரா அதற்கு, “வீடு நிறைய ஆளுங்க...பச்ச குழந்தை மாதிரி இந்த ஸ்ரீராமசந்திரனுக்கு ஆசைய பாரு. எல்லா ஆசையையும் நோட்டு போட்டு எழுதி வைங்க. நைட் பாக்காலாம்...இப்போவே வேணும்னா, உங்க அம்மாவை பாட சொல்லுங்க ” என்று அவனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது,

 

“வாங்க மீராக்கா  போலாம். காதி வெயிட் பண்ணுவான்” என்றாள் மது. இவளுக்கு விஷயம் தெரியுமா என்றபடி முழித்த மீராவிடம் “சந்தியா விஷயம் எனக்கு தெரியும் அக்கா. அவன் ரூட் விடுறதே அவளை கழட்டி விட தான்” என்றாள் மது.

 

“சும்மா...மதுவை சமாளிக்க அப்படி சொல்லியிருப்பான் காதி” என்று நினைத்து கொண்டே அவளுடன் சென்றாள் மீரா.

 

மாடியில் இருந்த கார்த்திக் மீராவுடன் மதுவும் அபியும் வர,“என்ன அண்ணி...நான் கட்சியா ஆரம்பிக்க போறேன். ஆள் சேத்துட்டு வர்றீங்க. அபி எதுக்கு?” என்றான். “மாடிக்கு யாராவது வந்தா நமக்கு சிக்னல் கொடுப்பா அதுக்கு தான்...அவளை மாடி என்ட்ரன்ஸ்ல நிறுத்தி வைப்போம்” என்றாள். “அண்ணி, இதுல பெரிய ப்ரோபஷினலாட்டம் யோசிக்கிறீங்களே“ என்ற கார்த்திக்கிடம் மது, “காதி, சீக்கிரம் அந்த பேய்க்கு போனை போடு. மூணாக அஞ்சு நிமிஷம் தான் இருக்கு” என்றாள்.

 

கார்த்திக் டாக்டர் ஜெயந்தி கிருஷ்ணனுக்கு அழைத்தான். ஸ்பீக்கர் போட்டான். அங்கே அழைப்பு வந்ததும் சந்தியா குதித்தாள். “ஏய்...ஒரு வழியா கால் பண்ணிட்டான்டி....சக்கு டயலாக் எல்லாம் கரெக்ட்டா சொல்லுடி” என்று போனை ஸ்பீக்கரில் போட்டு அவளிடம்  கொடுக்க

 

சக்தி : ஹலோ ஜெயந்தி கிருஷ்ணன் ஹியர்

 

கார்த்திக் : ஹலோ  ஐ அம் கார்த்திக்..

 

சக்தி : நான் கீழ்பாக் ஹஸ்பிட்டல் சைக்காட்ரிஸ்ட். இன்னக்கு செயின்ட் ஜோசப் ஹோஸ்பிட்டல் நீங்க தான ரெம்ப அரகன்ட்டா பிகேவ் பண்ணீங்க?

 

கார்த்திக்: அது அப்போ  .... இப்போ  ரெம்ப ரொமாண்டிக்கா பிகேவ் பண்ண போறேன். செம லவ் மூட்ல இருக்கேன்... ஸ்ஸான்டி ….கேன் யு ஹியர் மீ ஹனி? திஸ் இஸ் ‘ஆர். இ . எம் . ஓ ‘ ரெம்மோ’ ….

 

சந்தியாவை கூப்பிடுவது போல லேசாக சற்று குரலை உயர்த்தி கார்த்திக்கிற்கு மிக இயல்பாக வரும்  அமெரிக்க ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேச எதிர் முனையில் சக்தியும்  மற்ற தோழிகளும் சிரித்துவிட ….   “ஏய்...ரெமோவான்டி!!! உன் அங்க்ரி பர்ட் இப்போ லவ் பர்ட் ஆகிவிட்டது என, வேகமாக சந்தியா தரப்பு பேசுவது கார்த்திக்கிற்கு கேட்காத வண்ணம் போனில்   “மியூட்’ பட்டனை அழுத்திய சந்தியா.... “லூசு ...லூசு...... சிரிக்காதடி...சக்கு. அவன் இன்னும் ஏடா கூடமா பேசுறதுக்குள்ள ஏதாவது சமாளி... “ என்று சக்தியிடம் சொல்லும் போதே

 

கார்த்திக்: ஹே ஸ்ஸான்டி பேப்... ம்யூட் பண்ணாலும் ஐ ஹெயர் யு...கம் ஆன் ஹனி...

 

சக்தி சந்தியாவிடம் “ நான் ட்ரை பண்றேன்.... ஆனா, நீ ரெம்ப திட்டினா அப்புறம் அவன் பக்கம் சாய்ந்திடுவேன் “ என்றவாறே ‘ம்யூட்’ பட்டனை ஆப் செய்து விட்டு,

சக்தி: உங்க கூட பேசி என்ன ப்ராப்ளம்ன்னு டையகனைஸ் பண்ணலாம்னு பாத்தேன்.  சாரி மிஸ்டர் கார்த்திக், இது மன நலம் பாதிக்கப்பட்டவங்க இருக்கிற  ஹாஸ்பிட்டல். இங்க ஸ்ஸான்டியும் கிடையாது கேன்டியும்  கிடையாது.

 

கார்த்திக்: ஸ்ஸான்டி இல்லைன்னா என்ன ... நீங்க இருக்கீங்கள்ள... மை ஹாட்  பேப்க்கு நான் கொடுக்கிறது எல்லாம் டிரான்ஸ்பர் பண்ணீட மாட்டீங்க  ..... டாக்டர் ஜெயந்தி?

 

சக்தி: அப்படி என்ன கொடுக்க போறீங்க மிஸ்டர் கார்த்திக்?...

 

கார்த்திக் :கிருஷ்ணன் உங்களுக்கு கொடுத்ததே இல்லையா …

 

சக்தி:  கிருஷ்ணனா அது யாரு?

 

சந்தியா சக்தி தலையில் ஒரு கொட்டு வைத்து... “மக்கு..... சக்கு ….உன் புருஷன்டி”... என கிசுகிசுக்க “ஷ்...ஆ..வழிக்குதுடி...ஜந்து எனக்கு எம்.எஸ். மட்டும் தான்  புருஷன்னாக முடியும்.. வேற யாரையும் விளையாட்டுக்கு கூட சொல்ல மாட்டேன் “ சத்தமாக சொல்ல, எதிர் முனையில் கார்த்திக் தரப்பு விழுந்து விழுந்து சிரித்தபடி,

யாரோ யாரோடி உன்னோட புருஷன்....

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் …

யாரோ யாரோடி உன்னோட புருஷன்....

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் …

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க

அந்தப் பந்தை தீர்ததடிப்பனோ  சொல்லு

சந்தனப் பொட்டழகை சாஞ்ச  நடையழகை

வெள்ளி வெட்டி கட்டியவனோ சொல்லு

முறைப்படி இசை கற்று, கர்நாடக சங்கீதத்தில் நன்றாக பாடும் மீரா மிக அழகாக பாட, மதுவுடன்  அபியும் இவர்கள் பாடுவதில் சேர்ந்து கொள்ள  அந்த இடம் களைகட்டியது.

யாரோ யாரோடி உன்னோட....

 

பாடிக்கொண்டிருக்கும் போதே குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க,

“காதி யு கேரி ஆன்...பசங்க முழிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் ...மது, அபி வாங்க போலாம். அவன் பேசட்டும்” என்று பாடலை நிறுத்தி விட்டு வேகமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றாள்.

 

தோல்வியை தழுவிய சந்தியா சக்தியை முறைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகல முயல “எங்க ஓடுற.. உனக்கு வந்த ஆப்பை முழுசா வாங்கிட்டு போ” என்று மற்ற தோழிகள் தடுத்தனர்.

 

சக்தி: ஏன் பாட்டை நிறத்தி விட்டீர்கள்...பாடுங்கள் கார்த்திக்  பாடுங்கள் ..உங்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஜந்துவிடம் கொட்டு வாங்கி தாங்கி கொண்டிருக்கிறோம் (சந்தியாவை பார்த்து சிரித்துக்கொண்டே.)

 

கார்த்திக்:  எங்க டீம் எல்லாம் காலி. நான் என் ஸ்ஸான்டி கேட்டா மட்டும் தான் பாடுவேன்.....டாக்டர்....... ஜெயந்தி

 

சக்தி: முழுக்க நனைஞ்சாச்சே இனி டாக்டர் எதுக்கு? என் பேரு சக்தி...சந்தியாவோட ப்ரன்ட்..அந்த லேடி  வாய்ஸ் ரெம்ப நல்லா இருந்தது. யாருங்க அது?

 

கார்த்திக் :  எங்க அண்ணி மீரா. அவுங்க ஒரு சங்கீத மேதை. நானும் தான் நல்லா பாடுவேன் என் ஸ்ஸான்டி க்காக...அங்க ஒட்டி கேட்டுட்டு தான இருப்பா. அவகிட்ட கொடுங்க

ஸ்பீக்கரில் இருந்த போனில் அவன் பேசுவது கேட்க,  கையில் எடுக்காமல் ஸ்பீக்கர் போட்டபடியே பேசினாள்.

 

சந்தியா : என்ன.. சீக்கிரம் சொல்லுங்க கார்த்திக்...வேலை இருக்கு. நான் போகணும்

 

கார்த்திக் : பர்த்டே அதுவுமா என்ன வேலை என் ஹனிக்கு?

 

சந்தியா : லுக் கார்த்திக். தி கேம் இஸ் ஓவர். இன்னும் என்ன ஹனி....கால் மீ சந்தியா

 

கார்த்திக் : என்னோட கேம் இப்போ தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு ஹனி.  ஹனின்னு சொன்னா  ரெம்ப  நெர்வஸ்ஸா இருக்கா....ஹார்ட் பீட் எல்லாம் எகிறுதா.... மை ஹனி

 

சந்தியா : இப்படியெல்லாம் ரொமாண்டிக்கா பேசுனா பின்னாடியே ஓடி வந்துடுவேன் நினச்சீங்களா கார்த்திக். சந்தியா தட்டி விட்டுட்டு போய்கிட்டே இருப்பா. உங்கள் பேச்செல்லாம் வெட்கம்,மானம், சூடு,சுரணை இருக்கிற பொண்ணுகிட்ட போய் வச்சுகோங்க

 

கார்த்திக் : இப்படி அழகான பேய்க்கிட்ட மாட்டிகிட்டேனே...(பெருமூச்சு விட்டவனாய்) இனி எந்த பொண்ணை பாக்க போறேன்...சரி என்ன வேலை...நான் ஹெல்ப் பண்ணவா?

 

சந்தியா : ம்......சாப்பிடுற வேலை...ஆளை விடுறீங்களா பாஸ்?

 

சக்தி: இல்ல கார்த்திக்.....காபி குடிக்கிற வேலை...நாலு மணிக்கு காபி ஷாப்ல …  சந்தியாவிடம் திரும்பி “ட்ரீட்க்கு உன் பாஸ்ஸ  இன்வைட் பண்ணலையா ?”

 

இடையில் புகுந்து சக்தி போட்டு கொடுக்க, சந்தியா அவளை முறைத்தபடி...”மக்கு சக்கு ஏன்டி இப்படி காலை வாருற...உனக்கும் சேத்து ஆப்பு வைக்கிறேனா இல்லையான்னு பாரு” என்று கிசுகிசுத்தாள்.

 

கார்த்திக்: சக்தி ரெம்ப தேங்க்ஸ். அப்படியே எந்த காபி ஷாப்புன்னு சொன்னா நல்லா இருக்கும்.

 

சந்தியா: சக்தியிடம் திரும்பி “சக்தி சொல்லாதடி. இந்த டெஸ்ட் மங்கி வைக்கிற டெஸ்ட்ல வேர்ல்ட் பேமஸ் டேட்டா சயிண்டிஸ்ட் பாஸ் ஆகுறாரா பாக்கலாம்....” என்று பின் கார்த்திக்கிடம்,  “காபி ஷாப்பை நீங்களே கண்டுபிடிங்க பாஸ்....”

 

கார்த்திக்: பாஸ்சை  லேசா எடை போடாதம்மா ....கண்டிப்பா வருவேன். சரி கண்டுபிடிச்சா என்ன ரிவாட் கொடுப்ப?

 

சந்தியா:  முதல்ல வர முடியுதான்னு பாருங்க பாஸ்...

 

கார்த்திக் : சரி... ரிவார்ட்டை …..நீ கொடுக்காட்டி  என்ன...நான் கொடுக்கிறேன்.

 

சந்தியா : (ஒரு நொடி அதிர்ந்த சந்தியா) என்னது?

 

கார்த்திக்:  நச்சன்னு (அந்த ச்சில் அதிக அழுத்தத்துடன்)  ….....ஒரு ரிவாரிட். நேர்ல கொடுக்கிறப்ப தான் கும்முன்னு இருக்கும். சரி ...காபி ஷாப்ல பாக்கலாம்..... பை ஹனி.

பேசிய சிறிது நேரத்தில், சந்தியாவும் அவள்  தோழிகளும் அவர்கள் பி.எஸ்சி படித்த கல்லூரி அருகில் உள்ள காபி ஷாப்பிற்கு சென்றார்கள். செல்லும் வழியில் சந்தியா ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிறுத்தி  மருந்து ஒன்றை வாங்கி வந்தாள். சக்தி “என்னதுடி இது?” கேட்க “ம்...பேதி மருந்து” அலட்டாமல் சொன்னாள்  சந்தியா.

 

அந்த பேதி மருந்தில் சிக்கி சின்னபின்னமாக போவது யார்?

…..அடுத்த ஆட்டத்தில்...

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 8    

Go to Episode 10

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.