(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

“பன்னெண்டு மணி ஆச்சு சான்வி. காஷ்யாப்பும் நானும் மணியை பார்க்காம வேலை செய்துட்டு இருந்தோம்.”

  

“நீ காஷ்யாப் வீட்டுல இருந்து தான் கோட் எழுதணுமா என்ன? இங்கே வீட்டுல இருந்து உன் லேப்டாப்ல செய்ய முடியாதா?

  

“என்னுது அஞ்சு வருஷ பழைய லேப்டாப் அக்கா. இதுல என்னோட அப்ளிகேஷன் ஓபன் செய்யவே மணிக் கணக்காகும், அப்புறம் எங்கே இருந்து நான் கோட் எழுதுறது?

  

“புது லேப்டாப் வாங்க பணம் புரட்ட பார்க்கிறேன்.”

  

“வேண்டாம் சான்வி. ஏற்கனவே எனக்காக நீ நிறைய செலவு செய்துட்ட. நான் காஷ்யாப் வீட்டுல இருந்தே செய்றேன். அவன் கிட்ட பணம் இருக்கு, பிரச்சனை இல்லை! எங்க விர்ச்சுவல் ஆபீஸ் ரூம் சாப்ட்வேர் & ஆப் ரிலீஸ் ஆகட்டும் அதுக்கு அப்புறம் லேட்டஸ்ட் லேப்டாப் நானே வாங்கிக்குறேன்.”

  

“அது சீக்கிரமே நடக்க தான் போகுது ஆதி.”

  

சான்வி ஒருத்திக்கு மட்டுமே ஆதித்யா மீது நம்பிக்கை இருந்தது.

  

“நானும் அந்த நம்பிக்கையோட இருக்கேன் சான்வி. என்னோட ரோல் மாடல் டெக் குரு ஜக்ருதி மாதிரி பெரிய அளவுல இல்லைனாலும், சின்ன அளவிலேயாவது வரனும்! அது தான் என்னுடைய ஆசை.”

  

ஜக்ருதி உலக அளவில் கோலோச்சும் தொழில் நுட்ப துறையின் முன்னோடி. அவரின்  ஜக்ருதி சாப்ட்வேர் உலகில் தலை சிறந்த நிறுவனமாக இருந்தது. சிறு வயது முதலே ஆதித்யாவிற்கு ஜக்ருதி தான் ரோல் மாடல். அவரைப் போல வர வேண்டும் என்பது அவனின் கனவு.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.