(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

அவனுடன் கல்லூரியில் படித்த காஷ்யாப்பிற்கும் ஜக்ருதி தான் ரோல் மாடல்.

  

அதனாலேயே ஆதித்யாவும், காஷ்யாப்பும் ஒன்றாக புது சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி அதையே வைத்து புது நிறுவனம் நிறுவ முயன்றுக் கொண்டிருந்தார்கள்.

  

“உன் ஆசை எல்லாம் நிறைவேற தான் போகுது ஆதி!” என்று நம்பிக்கையுடன் சொன்னாள் சான்வி.

  

“சரி க்கா, இப்போ போய் அம்மாக்கு கடையிலே இருந்து பொருள் வாங்கி வரேன். நீயும் ஸ்கூலுக்கு கிளம்பு. டீச்சரே லேட்டா போனா நல்லா இருக்காது.”

  

ஆதி ஒரு பக்கம் போக, சான்வி புன்னகையோடு தன்னுடைய அறைக்கு சென்றாள்.

  

தி, இந்த நியூஸை பாரேன்!” நண்பன் காஷ்யாப் கத்துவதுப் போல சொன்னதும், டைப் அடித்துக் கொண்டிருந்த கோடை நிறுத்தி விட்டு எழுந்து வந்தான் ஆதித்யா.

  

காஷ்யாப் காட்டிய பிரவுசரில் இருந்த செய்தியை படித்தான்.

  

டெக் குளோபல் காம்பெடிஷன்

  

தொழில் நுட்ப தொழில் முனைவோர்களுக்கான அரிய வாய்ப்பு.

  

உங்களின் தொழில் நுட்ப திறமையை, புதிய சாப்ட்வேர்க்கான ஐடியாவை சொல்லுங்கள்.

  

ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் பரிசாக வெல்லுங்கள்.

  

அது மட்டுமில்லை, டெக் குரு ஜக்ருதியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பையும் பெறுங்கள்!

  

“வோ வாவ்! ஜக்ருதியை நேருல பார்க்கலாமா? காஷ்யாப்!”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.