(Reading time: 6 - 11 minutes)
Inspector Then
Inspector Then

தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 05 - தேன்மொழி

   

கேஸ் ஃபைல் - 01 - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!

  

டிவியில் முத்துக்குமாரின் கண்ணீர் பொங்கும் பேட்டி ஓடிக் கொண்டிருந்தது.

  

தன்னுடைய மனைவியை பணத்திற்காக யாரோ கொடூரமான முறையில் கொன்று விட்டதாக சோகம் ததும்ப குற்றம் சுமத்திக் கொண்டிருந்தான்.

  

டிவி பக்கம் இருந்து பார்வையை திருப்பிய அபினவ், மேஜையின் மீதிருந்த பேனாவை சுற்றியபடி யோசனையில் ஆழ்ந்திருந்த தென்றல்வாணனையும் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த முத்துக்குமார் மற்றும் ரமணியையும் பார்த்தான்.

  

முத்துக்குமார் முகத்தில் இப்போதும் வருத்தம் தெரிந்தது. அழுது அழுது அவனின் கண்கள் மொத்தமாக உருமாறி போயிருந்தது.

  

ரமணியின் முகத்தில் பெரிதாக உணர்ச்சிகள் இல்லை... அமைதியாக இருந்தது.

  

மருமகள் இறந்ததில் இவருக்கு பெரிய வருத்தம் இல்லை போலும்!

  

"இன்ஸ்பெக்டர் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. எதுக்காக எங்களை இப்படி உட்கார வச்சிருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

  

பேனாவை நேராக வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்த தேன், கேள்வி கேட்ட ரமணியை விட்டுவிட்டு அவரின் அருகே இருந்த முத்துக்குமாரை பார்த்தான்.

  

அபினவிற்கும் ஏன் இன்ஸ்பெக்டர் அவர்கள் இருவரையும் ஒன்றாக அமர வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை. பொதுவாக விசாரணையை தனியாக செய்வது தான் வழக்கம். என்ன காரணம் என்று புரியாவிட்டாலும், அவனும் ஆவலுடன் தென்றல்வாணனை கவனித்தான்.

  

முத்துக்குமாரை சில வினாடிகள் கூர்மையாக பார்த்த தேன்,

  

"ஸோ மிஸ்டர் முத்துக்குமார், உங்க மனைவியை யாரோ திருடனுங்க வந்து பணத்துக்காக கொலை செய்துட்டுப் போயிட்டங்கன்னு நீங்க நம்புறீங்க?" என அமைதியான குரலில்

5 comments

  • Interesting update Then ma'am 👏👏👏👏👏👏 Ramani rombha over than react aguraru...magan mele.irukura akarai thuliyum dil mele illaiye :Q: sandhega pada kudiyavara illai culprit Ivar thano :Q: mandaiya kai vidamal suspense break panunga madam ji... :yes: <br />Thank you and keep rocking!!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.