“நான் கான்டஸ்ட்ல தனியா கலந்துக்க விரும்புறேன், அக்ஷரா.”
“ப்ளீஸ், ப்ளீஸ் ஆதித்யா. எனக்கு வேற யாரையும் தெரியாது. நீயும் என்னை எல்லோர் மாதிரியும் தள்ளி விடுறீயே?”
“அப்படி கிடையாது.”
“அப்போ ப்ளீஸ், என்னை டீமா சேர்த்துக்கோ. ப்ளீஸ், ப்ரீட்டி ப்ளீஸ்! நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன். இந்தாஹ் எக்ஸ்பீரியன்ஸ் வச்சு கத்துக்க மட்டும் முயற்சி செய்றேன். நீ என்ன சொல்றீயோ அதை மட்டும் செய்றேன். ஐ ப்ராமிஸ். ப்ளீஸ் ஆதித்யா.”
அக்ஷரா குழந்தைப் போல கெஞ்சிய போது ஆதித்யாவால் மறுக்க முடியவில்லை.
“சரி. ஆனால் நான் செய்யனும்னு சொன்னா, ஏன் என்ன எதுக்குன்னு கேள்வி எல்லாம் கேட்க கூடாது. விஷயம் புரியலைனா என்னன்னு கேட்கலாம், ஆனால் இதை மாத்து, அதை மாத்துன்னு எல்லாம் சொல்லக் கூடாது.”
“சரி, நீ சொல்றதை மட்டும் செய்றேன். கேள்வியே கேட்க மாட்டேன்.”
“அப்போ நாம டீமா ரெஜிஸ்டர் செய்திடலாம்.”
“ஹையா!”
அக்ஷரா சந்தோஷத்தில் குதிக்க, ஆதித்யா கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.
“என்ன ரெஜிஸ்டர் செய்யலாம்னு சொல்லிட்டு வாட்ச்ல டைம் பார்க்குற?”
“என் அக்கா என்னோட லக்கி சார்ம். அவக் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு நாம டீமா ரெஜிஸ்டர் செய்யலாம்னு பார்க்கிறேன். இங்கே சிக்ஸ் தர்ட்டி, அப்போ சென்னைல எய்ட்