தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 09 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !
“இந்தா உனக்கு பிடிச்ச பக்கோடா!!”
சத்யாவின் கையில் இருந்த ஆவி பறக்கும் தட்டை பார்த்ததும் சப் இன்ஸ்பெக்டர் அபினவின் முகம் மலர்ந்தது!
“உங்க கை வண்ணம் யாருக்கும் வராது மேடம்! வாசனையே அமர்க்களமா இருக்கு!” என்று சொன்னப் போதே அவனின் கைகள் நீண்டு சத்யா கையில் இருந்த தட்டைப் பற்றியது.
சத்யா அவனின் கையை தட்டி விட்டாள்.
“மேடம்ன்னு சொன்னா, தொடக் கூடாது! எத்தனை தடவை உன் கிட்ட சொல்லிட்டேன்? அக்கா ன்னு கூப்பிடு அப்போ பக்கோடா தரேன்.”
“சார்க்கு பிடிக்காது. நான் மேடம்ன்னும் கூப்பிடலை, அக்கான்னும் கூப்பிடலை பொதுவா பேசுறேன், தட்டை கொடுங்க!”
“நல்லா தான் போலீஸ்க்காரங்களை செலக்ட் செய்றாங்க! சப் இன்ஸ்பெக்டர் வேலை எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?”
“தேன் சார் கீழ வேலை செய்றது ரொம்ப பிடிச்சிருக்கு. அவரோட அப்ரோச், யோசிக்குற ஸ்டைல் எல்லாம் வித்தியாசமா நல்லா இருக்கு. அவரை மாதிரியே நானும் சின்சியர் இன்ஸ்பெக்டர் ஆகணும்னு நினைக்கிறேன்.”
அபினவ் கணவனை புகழ்ந்ததும் சத்யாவின் முகம் இளகியது, மனமும் கனிந்தது.
அபினவிடம் தட்டைக் கொடுத்தாள்.
அவன் ஆர்வத்துடன் பக்கோடா உண்பதை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தவள், பின், “நான் உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கப் போறேன், அபினவ். இது அவருக்குத் தெரியக் கூடாது!” என்றாள்.